மேற்குவங்கத்தில் அழுத்தமாக தடம் பதித்த பாஜக

மேற்குவங்கத்தில் அழுத்தமாக தடம் பதித்த பாஜக

மேற்கு வங்காளத்தில் மம்தாவின்  சிறுபான்மை ஓட்டுக்காக அவர்களுக்கு  ஆதரவு நிலைபாட்டினால் நேற்று கொல்கத்தாவில் நடைபெற்ற பிரதமர் மோடி பங்கேற்ற தேர்தல் தேர்தல் பிரச்சார பொது கூட்டத்திற்கு லட்ச கணக்கான மக்கள் குவிந்தனர். மேற்கு வங்காளத்தில் அசைக்க முடியாத சக்தி என்றும் எதிர்கட்சியின் பிரதமர் வேட்பாளர் என்றும் கருதப்படும் மம்தா, சென்ற முறை மேற்கு வங்காளத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் 34 இடங்களை பிடித்தார். தற்போது மீண்டும் அந்த வெற்றியை தொடருவதற்காக முக்கிய எதிர்கட்சிகளின் நடவடிக்கைகளை அராஜகமான முறையில் தடுத்து வருகிறார். முக்கிய எதிர் கட்சியான பாஜகவின் பொதுகூட்டம் பிரசார யாத்திரை போன்றவற்றை முடக்கி அரசியல் லாபம் அடைய முயலுகிறார்.

மாநிலத்தின் பல்வேறு தொகுதிகளில் குடியேறியுள்ள சட்டவிரோத பங்களதேஷ ஊடுருவல் முஸ்லிம்களுக்கு சகல வசதிகளையும் செய்து கொடுத்து மண்ணின் மைந்தர்களான மேற்கு வங்க ஹிந்துகளை இரண்டாம்தர குடிமக்களாக நடத்தி வருகிறது. சட்டத்தின் ஆட்சியை விட மதரசாக்களில் உள்ள இம்மாம்களின் சொல்லுக்கே மதிப்பிருகிறது. மேலும் மாநிலத்தில் வித்யபபாரதி ஆர்.எஸ்.எஸ் நடத்தி வரும் நூற்றுகணக்கான பள்ளிகளை மூடவும் உத்தரவிட்டுள்ளது. தேச விரோத கும்பல்களுக்கு வக்காளத்து வாங்கும் திரிணமுல் காங்கிரஸ் தேச பக்த ஹிந்து அமைப்புகளை திட்டமிட்டு நசுக்கி வருகிறது.

இதனால் வெறுப்படைந்த மக்கள் சிறுபான்மை மக்களின் ஓட்டுக்களை மொத்தமாக பெறுவதற்காக பெருபான்மை மக்களின் உரிமையை முடக்கும் மமதாவின் அராஜக ஆட்சியை எதிர்க்கும் பாஜகவின் பின்னால் அணி சேர்ந்துள்ளனர். சென்ற முறை இரண்டு தொகுதிகளில் மட்டுமே வென்ற பாஜக தற்போது பனிரெண்டு தொகுதிகள் வரை கைப்பற்றும் என தேர்தல் கணிப்புகள் தெரிவிக்கின்றன. மாநிலத்தின் ஒரு சில பகுதிகளில் மட்டுமே இருந்த பாஜக தற்போது மாநிலம் முழுவதும் தனது தடத்தை பதித்துள்ளது என்பதற்கு நேற்று சிலிகுரியில் நடைபெற்ற பிரதமரின் தேர்தல் பிரசார பொதுகூட்டத்திற்கு திரண்டு இருந்த மக்கள் வெள்ளமே சாட்சி.