மேற்கு வங்கத்தில் அமித் ஷாவிற்கு தடை

மேற்கு வங்கத்தில் அமித் ஷாவிற்கு தடை

மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக பேரணி, பொதுக்கூட்டம், ரத யாத்திரை ஆகியவற்றை நடத்த திட்டமிட்டது. ஆனால், மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பேனர்ஜியோ அவற்றை எல்லாம் ஏதோ காரணம் கூறி தடை விதித்து வருகிறார். இப்போது பாஜக 5 இடங்களில் பொது  கூட்டங்கள் நடத்த திட்டமிட்டுள்ளது. இதற்காக பாஜக தலைவர் அமித் ஷா ஹெலிகாப்டர் மூலம் மேற்கு வங்கத்திற்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

ஆனால், ஹெலிகாப்டர் இறங்க வேண்டிய மால்டா விமான நிலையத்தில் ஓடு தளத்தில் கட்டுமானப்பணி நடப்பதாக கூறி மம்தா அரசு அமித் ஷா வரும் ஹெலிகாப்டர் தரையிறங்க அனுமதி மறுத்துவிட்டது. இதனால், வங்க தேச எல்லையில் உள்ள ஹெலி பேடில் ஹெலிகாப்டரை தரை இறக்க எல்லை பாதுகாப்பு படையினரிடம் பாஜக அனுமதி கோரியுள்ளது. ஓடுதளம் சுத்தமாக இருப்பதாகவும், திட்டமிட்டே அனுமதி மறுக்கப்படுவதாகவும்  மேற்கு வங்க பாஜக குற்றம்சாட்டுகிறது.

மேற்கு வங்க முதல்வர்  பாஜகவை கண்டு அஞ்சுகிறாரா? அவர்களது ஜனநாயக நடவடிக்கைகளுக்கு கூட அனுமதி மறுக்கிறாரே? என்று அரசியல் வட்டாரத்தில் முணுமுணுக்கிறார்கள்.