மேற்கு வங்கம் - பாஜகவில் இணைந்த எம்.பி., எம்எல்ஏக்கள்

மேற்கு வங்கம் - பாஜகவில் இணைந்த எம்.பி., எம்எல்ஏக்கள்

திரிணமூல் காங்கிரஸை சேர்ந்த ஒரு எம்.பி., ஒரு எம்எல்ஏ. மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஒரு எம்.எல்.ஏ.வும் செவ்வாய்க்கிழமை பாஜகவில் இணைந்தனர். 

மேற்கு வங்க மாநிலம் போல்பூர் மக்களவை தொகுதியின் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.யாக இருந்து வருபவர் ஹஸ்ரா. இவர் தில்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பொது செயலாளரும், மாநில பாஜக பொறுப்பாளருமான கைலாஷ் விஜய்வர்கியா மற்றும் மூத்த தலைவர் முகுல் ராய் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். முன்னதாக, கட்சி விரோத செயலில் ஈடுபட்டு வருவதாக கூறி அவரை கட்சியிலிருந்து நீக்குவதாக திரிணமூல் காங்கிரஸ் கடந்த 9-ஆம் தேதி அறிவித்திருந்தது. அவருடன், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிகாடா தொகுதியின் எம்எல்ஏ துலால் சந்திரா மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஹபீப்பூர் எம்எல்ஏவான காகென் முர்மு ஆகியோரும் பாஜகவில் இணைந்தனர்.  

பாஜகவில் இணைந்த மூவரும் கூறுகையில், மாநிலம் முழுவதும் மம்தா பானர்ஜிக்கு எதிரான அலை வீசி வருகிறது. மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு ஏற்பட்டுள்ளதால் திரிணமூல் காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும், விரைவில் பாஜகவில் அதிகளவில் இணைவார்கள் என்று தெரிவித்தனர்.