மேற்கு வங்க மாநிலம் இஸ்லாமிய மயமாகிறதா - பகுதி 2

மேற்கு வங்க மாநிலம் இஸ்லாமிய மயமாகிறதா - பகுதி 2

    மேற்கு வங்க மாநிலத்தில் மதரஸாக்களின் செயல்பாடுகள் மற்றும் அதன் போக்குகளைப் பற்றியும் தெரிந்து கொண்டால், எவ்வளவு விரைவாக இஸ்லாமிய மாநிலமாக மாற்ற முயலுகிறார்கள் என்பது வெட்ட வெளிச்சமாகும்.   சட்ட விரோத மதரஸாக்கள், பயங்கரவாதிகளின் புகலிடமாகவும்,  பயங்கரவாத தாக்குதலுக்கு தேவையான ஆயுதங்கள் மற்றும் வெடி மருந்துக்கள் பதுக்குமிடமாகவும் பயன்படுத்தப்படுகிறது.  பாகிஸ்தான்  மற்றும் பங்களா தேஷ் நாட்டிலிருந்து ஊடுருவும் ஜிகாதிகள் பாதுகாப்பாக தங்குமிடம் சட்ட விரோத மதரஸாக்கள்.  பாரத தேசத்தில் புதிதாக சேரும் ஜிகாதிகளுக்கு பயிற்சி அளிக்கும் கேந்திரமாகவும் மேற்கு வங்க  மதரஸாக்கள் செயல்படுகின்றன.  

                2.10.2014ந் தேதி மேற்கு வங்க மாநிலம் பர்துவான் மாவட்டத்தில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது.  குண்டு வெடிப்பு நிகழ்ந்த கட்டிடம் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் நுரூல் ஹூசைன் சௌத்திரி என்பவருக்கு உரியது.  இந்த கட்டிடத்தின் கீழ் பகுதியை ஷகீல் அகமது என்பவருக்கு வாடகைக்கு விட்டு இருந்தார்.  மேலும் இந்த கட்டிடத்தில் சட்ட விரோதமான முறையில் மதரஸாவும் இயங்கி வந்தது.  குண்டு வெடிப்பிற்கு பின், தேசிய புலனாய்வு பிரிவினரின் தீவிர விசாரணைக்கு பின்னர், குண்டு வெடிப்பு நடந்த இடத்திலிருந்து 50க்கும் மேற்பட்ட ஐ.இ.எம். என்ற வெடி பொருள்கள் கண்டு பிடிக்கப்பட்டது.  இதில் சில பெண்களுக்கும் தொடர்பு இருப்பதும் தெரிய வந்தது.   

       இம் மாதிரியான சட்ட விரோத மதரஸாக்கள் தீவிரவாத குழுக்களுடன் தொடர்பில் இருப்பதும், பங்களா தேஷ் நாட்டிலிருந்து இயங்கும் பல்வேறு பயங்கரவாத அமைப்பபுகளின் ஜிகாதிகளின் மேற்பார்வையில் மதரஸாக்கள் இயங்குவதும் தெரியவந்தது.   மத்திய புலணாய்வு அமைப்பும், தேசிய பாதுகாப்பு படையும் இணைந்து  பர்துவான் மாவட்டத்தில் உள்ள மங்கல்கோட்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட சிமுலியா மதரஸாவிலும், மூர்ஷிதாபாத் மாவட்டத்தில் லால்கோலா காவல் நிலையத்திற்குட்பட்ட மூகீம் நகர் மதரஸாவிலும் நடத்திய சோதனையில்  செல்போன்கள், நூற்றுக் கணக்கான சிம் கார்டுகள், ஜிகாதி வெளியிடுகள், ஆகியவையும்  குண்டு வெடிப்பு நடந்த இடத்திலிருந்து தலைமறைவான ஷேக் யூசுப்பின் மாமனாரின் வீட்டிற்கு இணைப்பு கொடுக்கப்பட்டதும், சோதனையில் கண்டு பிடிக்கப்பட்டது.   இது பற்றி இந்திய டுடே பத்திரிக்கையில் வந் செய்தி,

                பணி ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி சாந்தி முகர்ஜி என்பவர், பர்துவான் குண்டு வெடிப்பின் மூலம், மேற்கு வங்க மாநிலம் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் உள்ளது.  58க்கும் மேற்பட்ட தீவிரவாத   தொகுதிகள் செயல்பாட்டில் உள்ளன.  விசாரணையில்  எதுவும் கிடைக்கவில்லை.  180க்கும் மேற்பட்ட பங்களா தேஷ் தீவிரவாதிகள் மேற்படி தீவிரவாத தொகுதிகளை இயக்குகிறார்கள், இவர்கள் ஜமாத்  உல் முஜாஹிதீன் பங்களா தேஷ் என்ற தீவிரவாத அமைப்புடன் தொடர்பிலிருப்பது மட்டுமில்லாமல், அவர்களின் உத்திரவுப்படியே செயல்படுகின்றன என தெரிவித்தார்.   இது சம்பந்தமாக தேசிய புலனாய்வு அமைப்பானது திரு. எஸ். கே. சிங் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு, முழு விசாரணையை நடத்த உத்திரவிட்டது.  இந்த குழுவானது மத்திய உள்துறை அமைச்சகத்திடம் ஏழு பக்க அறிக்கையை சமர்பித்தது. 

       தேசிய புலனாய்வு அமைப்பு கொடுத்த அறிக்கையில், இரண்டு முக்கியமான அம்சத்தை குறிப்பிட்டிருந்தார்கள்.  ஒன்று பயங்கரவாத அமைப்பினருக்கு உள்ளுரில் உள்ள திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர்கள் முழு உதவி செய்திருக்கிறார்கள்.  இரண்டாவது, மாநில அரசின் உளவுத் துறை முறையான விசாரணையை நடத்தவில்லை.  சந்தேகத்திற்கிடமானவர்களிடம் விசாரணையை நடத்தாமல், அவர்களை விடுவித்ததும், ஆட்சியாளர்களின் நிர்பந்தத்தால், பலர் விசாரணை வளையத்திற்குள் வரவில்லை என குறிப்பிட்டிருந்தார்கள்.  பர்துவான் குண்டு வெடிப்பின் காரணமாக கைது செய்யப்பட்ட அப்துல்  ஹக்கீம், ரூமி பேபி ஷகில் அகமதுவின் மனைவி, ஹாசன் மனைவி அகில்மா பேபி ஆகியோரை  தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிக்க மாநில அரசு ஒப்புதல் அளிக்கவில்லை.     

       பங்களா தேஷ் நாட்டில் உருவான ஜமாத் உல் முஜாஹூதின் பங்களா தேஷ் என்ற பயங்கரவாத அமைப்பு 2014 லேயே இந்தியாவில் ஊடுருவி, மேற்கு வங்க மாநில எல்லை புற மாவட்டங்களில் உள்ள சட்ட விரோத மதரஸாக்களில் தஞ்சம் புகுந்துள்ளார்கள்.   பர்துவன் குண்டு வெடிப்பின் காரணமாக கைது செய்யப்பட்ட இரண்டு பெண்களின் வாக்குமூலத்தின் படி, பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.  பங்களா தேஷ் நாட்டிலிருந்து ஊடுருவிய ஜமாத் உல் முஜாஹூதின் ஜிகாதிகள்,  மூர்ஷிதாபாத், மால்டா, நெய்டா போன்ற மாவட்டங்களில் உள்ள சட்ட விரோத மதரஸாக்களில்  புதிதாக சேர்க்கப்பட்ட ஜிகாதிகளுக்கு பயிற்சி அளித்துள்ளார்கள்.  இந்த பயிற்சிக்காக சவுதி அரேபியாவிலிருந்து நிதி பெறப்பட்டுள்ளது.  மேற்படி மதரஸாக்களில் வெடி குண்டுகள் தயாரிக்கப்பட்டன.  தயாரிக்கப்பட்ட வெடி குண்டுகள்  டாக்காவிற்கும், அஸ்ஸாமும் அனுப்பி வைக்கப்பட்டன.  அஸ்ஸாமிற்கு அனுப்ப பட்ட வெடி குண்டுகள் பயங்கரவாத தாக்குதலுக்கு அனுப்ப பட்டதாக அவர்கள் நடத்திய உரையாடல் மூலமாக தெரிந்து கொண்டோம், ஆனால் டாக்காவிற்கு ஏன் அனுப்பபட்டது என்பது தெரியவில்லை.    கல்கத்தாவில் உள்ள   Burrabazar பஜாரில் வெடி குண்டு தயாரிக்க தேவையான மூலப் பொருட்கள் வாங்கப்பட்டன. 

       மேற்கு வங்க மாநிலத்தில் இயங்கும் சட்ட விரோத மதரஸாக்களுக்கு, பயங்கரவாத ஜிகாதிகளை உருவாக்க நிதி வருவது எப்படி என்பதை பார்க்க வேண்டும்.  பர்த்துவான் குண்டு வெடிப்பு போல் மற்ற இடங்களிலும் குண்டு வெடிக்க வேண்டும் என்பதற்காக சேர்க்கப்பட்ட ஜிகாதிகளுக்கு நிதியை பெற்று செயல்படுத்துவதற்காகவே பங்களா தேஷ் நாட்டைச் சார்ந்த ஜமாத் உல் முஜாஹூதின் பங்களா தேஷ் அமைப்பின் முக்கிய பொறுப்பாளர்  Kausar  என்பவர் மேற்கு வங்கத்தில் ஊடுருவி  பர்த்துவான் மாவட்டத்தில் உள்ள மதரஸாவில் தங்கியிருப்பவர்.   பங்களா தேஷ் நாட்டில் சியால்ட் (Syhlet ) பகுதியில்  உள்ள ஜே.எம்.பி. அமைப்பின் தலைமையிடத்திலிருந்து, அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள ஒரு டாக்டருக்கு பணம் கூரியர் மூலம் அனுப்பபடும்.  மேற்படி நிதி சம்பந்தமான தகவல்  கிடைத்தவுடன்,   Kausar என்பவர் மூவரை நியமித்து, அவர்கள் மூலமாக    பணத்தை பெற்றுக் கொள்வார்.  ஒரு முறை கொடுக்கும் பணம் ரூ10 லட்சத்திற்கு அதிகமாகவே இருக்கும். என விசாரணையில் இரண்டு பெண்களும் தெரிவித்தார்கள்.   தயாரிக்கப்பட்ட வெடி குண்டுகள் இந்தியா பங்களா தேஷ் எல்லையில் அமைந்துள்ள மதரஸாக்களில் பதுக்கி வைக்கப்படும்.   

       மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த 40 ஆண்டுகளாக ஆட்சி செய்தவர்கள், இஸ்லாமியர்களின் எண்ணத்திற்கு ஏற்ப வளைந்து கொடுத்து ஆட்சி செய்தார்கள்.  முதலில், இஸ்லாமியர்களின் திட்டப்படி மேற்கு வங்க மாநிலத்தின் மக்கள் தொகையில் இஸ்லாமியர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது.  இத்திட்டத்தின்  படி  கடந்த 40 ஆண்டுகளில் 38 சதவீதம் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை கூடியுள்ளது.  உயர்வுக்கு முக்கியமான காரணம் பங்களா தேஷ் நாட்டிலிருந்து ஊடுருவியவர்களின் கூடுதலான எண்ணிக்கை.   இதன் காரணமாக எல்லைப்புற மாவட்டங்களில் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை 50 சதவீததத்திற்கு மேல் இருக்கின்றது

       திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சியில் நடந்த மிகப் பெரிய மோசடி சாரதா சிட்பண்ட் மோசடி.  மிகவும் கவலைப் பட வேண்டிய ஒரு விஷயம், மேற்கு வங்க மக்களிடம் சிறு சேமிப்பு என்ற பெயரில் கொள்ளையடித்த சாரதா சிட் பண்ட், பங்களா தேஷ் நாட்டில் இயங்கும் ஜமாத்-இ-இஸ்லாமி என்ற பயங்கரவாத அமைப்பிற்கு அதிக அளவில் நிதி அளித்துள்ளார்கள்.  மேற்படி நிதியானது பங்களா தேஷ் அரசுக்கு எதிராக வெடி குண்டு தாக்குதல் நடத்துவதற்கு என்பது பின்னர் தெரிய வந்தது.   எல்லைகளுக்கு அருகில் உள்ள பங்களா தேஷ் பகுதிக்கு கள்ளத் தனமாக கோடிக்கணக்கான ரூபாய் அனுப்பபட்டுள்ளது.  இந்திய நாணயத்தை பங்களா தேஷ் நாணயமாகவும், ஐரோப்பிய நாணயமாகவும், கொல்கத்தாவில் உள்ள இஸ்லாமிய தொழிலதிபர் மாற்றிக் கொடுத்துள்ளார்.  இவர் மம்தாவின் நெருங்கிய நண்பர் என ஆனந்த பஜார் பத்திரிக்கா செய்தி வெளியிட்டுள்ளது.  இதே போல் ஜமாத் –இ- இஸ்லாமி அமைப்பானது 2011 மற்றும் 2014-ல் நடைபெற்ற சட்ட மன்ற மற்றும் பாராளுமன்ற தேர்தலில் கோடிக்கணக்கில் மம்தாவிற்கு தேர்தல் நிதியாக கொடுத்துள்ளது.  இந்த நிதியானது குறிப்பாக இஸ்லாமிய பகுதிகளில் செலவு செய்வதற்கு என கூறியே கொடுத்ததாகவும் அந்த பத்திரிக்கை குறிப்பிட்டுள்ளது.

                                                                                                                                         தொடரும்....

-ஈரோடு சரவணன்