மேற்கு வங்க மாநிலம் – இஸ்லாமிய மாநிலமாக மாறும் ஆபத்து - பகுதி 1

மேற்கு வங்க மாநிலம் – இஸ்லாமிய மாநிலமாக மாறும் ஆபத்து - பகுதி 1

பாகிஸ்தானிலிருந்து வெளிவரும் டான் என்ற ஆங்கில பத்திரிக்கையின் நிருபருக்கு, மேற்கு வங்க மாநில சட்ட மன்ற உறுப்பினரும், மம்தா பானர்ஜியின் நெருங்கிய நண்பருமான பாபி ஹக்கீம் என்பவர் அளித்த பேட்டியில், கொல்கத்த ஒரு குட்டி பாகிஸ்தான் என கூறியுள்ளார். Canvassing in Mini – Pakistan  of Kolkata  என்ற தலைப்பில்  டான் பத்திரிக்கையில் ஒரு விரிவான கட்டுரை  வெளியிட்டு,  கார்டன் ரீச் என்ற இடத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் பாபி ஹக்கீம்  பேசியது முழுவதும்  குறிப்பிட்டப்பட்டு வெளியிட்டது. இந்த சம்பவம் நடந்தது 2016-ல் மேற்கு வங்க மாநிலத்திற்கு நடைபெற்ற சட்ட மன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது. இதற்கிடையில் 21.11.2018ந் தேதி ஆங்கில தினசரி இதழில், தொழில் முறையில் இல்லாத ஹம் ரேடியோ இயக்குபவர்கள், நள்ளிரவுக்கு மேல் சங்கேத பாஷையில் சில ரேடியோ உரையாடல் வருகின்றன.  மேற்படி சங்கேத பாஷை ஆப்கானிஸ்தானின் பஷ்தோ மொழியில் இருப்பதாகவும், மேற்படி உரையாடலை  இடைமறித்து நாம் தொடர்ந்தால், தொடர்பு துண்டிக்கப்படுகிறது என புகார் தெரிவித்தார்கள்.  மேற்படி நிகழ்வுகள் மேற்கு வங்க மாநில எல்லைப்புற மாவட்டங்களில் நடைபெறுகிறது.  குறிப்பாக வடக்கு 24 பர்கான மாவட்டத்தில் உள்ள Sodepur      எனுமிடத்திலும்,  2016-லேயே இது போன்ற சம்பவங்கள்   பங்களா தேஷ் எல்லையில் உள்ள Basirhat and Sunderbans region. பகுதியில் நிகழ்ந்துள்ளது.  இதனால் பல சந்கேங்கள் எழுகின்றன.   2016-ல் நடைபெற்ற சம்பவத்தை தற்போது எடுத்து கூற வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வி இயற்கையாகவே எழும்.  ஹம் ரேடியோவின் சம்பவம் நடைபெற்றதால், இஸ்லாமியர்களின் ஆதிக்கம் எவ்வாறு அமைகிறது என்பதை சுட்டிக் காட்ட இந்த சம்பவத்தை கோடிட்டு காட்ட வேண்டிய  நிலை ஏற்பட்டுள்ளது.

          மேற்கு வங்க மாநிலத்தை 30 ஆண்டுகள் ஆட்சி செய்த இடதுசாரி கம்யூனிஸ்ட்களின் ஆட்சியில் கூட, பயங்கரவாத செயலுக்கு உடந்தையாக இருந்ததாகவும், உளவு பிரிவினர் தெரிவித்தும் பயங்கரவாத செயல்களில்  ஈடுபடும் சில இஸ்லாமியர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.  கடந்த 2011லிருந்து ஆட்சியிலிருக்கும் மம்தா பானர்ஜி,  ஒரு இஸ்லாமிய பெண்மணியாகவே அரசை நடத்துகிறார்.   மேற்கு வங்க மாநிலத்தை இஸ்லாமிய மாநிலமாக மாற்ற முயலுகிறாரோ என்ற சந்தேகம் வலுக்கிறது.   கேரளாவில் இடதுசாரி கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சியில் குறிப்பாக இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் முதல்வராக இருந்த போது, இஸ்லாமியர்களுக்கு மலப்புரம் மாவட்டம் என்றும், கிறிஸ்துவர்களுக்கு இடுக்கி மாவட்டம் என சில மாவட்டங்களை பிரித்துக் கொடுத்தார்.  இன்று இந்தியாவில் ஒரு குட்டி பாகிஸ்தானாகவே மலப்புரம் மாவட்டம் மாறிவிட்டது.  கேரளத்தைப் போலவே, தற்போது மேற்கு வங்க மாநிலம் முழுவதும் இஸ்லாமிய மாநிலமாக மாறிவிடுமோ என்ற அச்சம் நாளுக்கு நாள் ஏற்படுகிறது.  இந்த அச்சத்திற்கு காரணம், முன்னாள் இடதுசாரிகளின் ஆட்சியிலும், தற்போது மம்தா ஆட்சியிலும், இஸ்லாமியர்களுக்கு கொடுக்கும் சலுகைகள், உரிமைகளைப் பார்க்கும் போது இம்மாதிரியான சிந்தனை தோன்றுகிறது.

        இடதுசாரிகளின் ஆட்சியிலும், மம்தாவின் ஆட்சியிலும் நடந்த நிகழ்வுகள் அச்சத்தை ஏற்படுத்துகின்றன.   மேற்கு வங்க மாநிலத்தில் அங்கீகரிக்கப்பட்ட மதரஸாக்கள் 500 என்றும், அங்கீகரிக்கப்படாத மதரஸாக்களின் எண்ணிக்கை 4,000 மேல் என தேசிய புலனாய்வு பிரிவினர் தெரிவித்தார்கள்.   58க்கு அதிகமான  பயங்கரவாத  Modules -ல்கள் உள்ளன.   இவர்களின் நோக்கம் அண்டை நாடான பங்களா தேஷ் நாட்டின் அதிபர் ஷேக் அஸினாவை பதவியிறக்கம் செய்வது மட்டுமில்லாமல், அல்காயிதா மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ்.க்கு ஆட்கள் சேர்ப்பதும், இதற்காக ஆந்திரா மற்றும் மகாராஷ்ட்ரவில் உள்ள இஸ்லாமிய இளைஞர்களை மூளை சலவை செய்து, ஜிகாதி பயிற்சிக்கு அழைப்பது முக்கியமான பணியாகும்.  இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் கிரிமினல் பின்னணி கொண்ட பெண்களும், இளைஞர்களும் ஜிகாதி அமைப்பில் இணைகிறார்கள்.  இவர்களுக்கு பயிற்சி அளிப்பது பர்துவான் மற்றும் முர்ஷிதாபாத் நகரில் உள்ள மதரஸாக்கள்.

        மம்தா ஆட்சியில் சிமி இயக்கத்தின் முக்கிய பொறுப்பாளரை ராஜ்ய சபா தேர்தலுக்கு வேட்பாளராக அறிவித்த சம்பவமும் உண்டு.   பல்வேறு பிரச்சினைகள் கொண்ட Dainik Kolom  பத்திரிக்கையின் ஆசிரியர்          அகமது ஹூசைன் இம்ரான் என்பவர் ராஜ்ய சபா தேர்தல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.   இவர் மேற்கு வங்க மாநிலத்தில் சிமி அமைப்பை ஏற்படுத்தியவர்,  மேற்கு வங்க மாநிலத்தில் இஸ்லாமியர்களை ஒன்றுப்படுத்தவும், இஸ்லாமிய கலாச்சாரத்தையும், நாகரீகத்தையும் பாதுகாக்கவும் ஒரு தொண்டு நிறுவனத்தை ஏற்படுத்தி, அரசியல் ஆதாயம் அடைபவர்.   அகமது ஹூசைன் இம்ரான்னின் தொடர்பில் உள்ளவர்கள், இஸ்லாமிய தீவிரவாத சிந்தனை கொண்டவர்கள் மற்றம் வெளிப்படையாக இஸ்லாமிய நாடு உருவாக வேண்டும் என பிரச்சாரம் செய்தவர்கள்.  தீவிரவாத எண்ணம் கொண்ட அக்பரூதின் ஒவாசி,  அசாம் மாநில AIDUF  சேர்மன் பத்துரூதீன் ஆஸ்மல்,  சமஸ்வாதி கட்சியின் இஸ்லாமியர் ஆஸம் கான் ஆகியோர்.  1977-ல் அலிகார் பல்கலைகழகத்தில் சிமி துவங்கப்பட்ட போது, இம்ரான் மேற்கு வங்க மாநில தலைவராக நியமிக்கப்பட்டவர்.  பயங்கரவாத அமைப்பான ஜமாத்-இ-இஸ்லாமி, பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. வுடன் இம்ரானுக்கு தொடர்பு உள்ளது.  இவருடைய தொடர்பு என்பது, மேற்கு வங்க மாநிலத்தை இஸ்லாமிய மயமாக்குவதற்கு செயலாற்றுபவர்களுடன் மட்டுமே நெருங்கிய தொடர்பை ஏற்படுத்தியுள்ளார்.   

                அகமது ஹூசைன் இம்ரான், சவுதி அரேபியாவின் நிதி உதவியுடன் செயல்படும் பயங்கரவாத அமைப்பான ஜமாத்-உல்-முஜாஹிதீன்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்.  மேற்கு வங்க மாநிலத்தில் கொல்கத்தா மற்றம் கானானில் நடந்த வன்முறைக்கும் இவருக்கும் தொடர்பு உண்டு என மத்திய உளவு பிரிவான ரா கூறியதையும் புறக்கணித்தவர் மம்தா.  தனது பத்திரிக்கையில் இஸ்லாமியர்கள் அதிகமாக வழும் பகுதிகளில் ஷரியத் படி நடக்க வேண்டும் என உத்திரவிட்டவர்.   மேற்கு வங்க மாநிலத்தை இஸ்லாமிய மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற பாகிஸ்தானின்  திட்டத்திற்கு உறுதுணையாக நின்றவர்.  இஸ்லாமிய வங்கியை ஏற்படுத்த முனைந்தவர்,  சவுதியிலிருந்து செயல்படும்  Islamic Development Bank வங்கியின் முதன்மை அதிகாரிகளுடன் தொடர்ப்பில் உள்ளவர்.  இந்த அமைப்பு தான் ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய சகோதரத்துவம் என்ற பயங்கரவாத அமைப்பிற்கு நிதி உதவி செய்யும் வங்கியாகும்.  பயங்கரவாத அமைப்புடனும், பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளுடன் தொடர்பு கொண்டவரை, ராஜ்ய சபா உறுப்பினருக்கு பரிந்துரை செய்தவர் மம்தா.  இது மிகப் பெரிய சந்கேத்தை ஏற்படுத்துகிறது.  மம்தாவும மேற்கு வங்க மாநிலத்தை இஸ்லாமிய மாநிலமாக மாற்ற துணை போகிறாரா என்பதாகும்.

        மம்தா அரசு எடுத்த பல நடவடிக்கையின் காரணமாகவே, சந்தேகம் எழுகிறது.  ஆட்சிக்கு வந்தவுடன் சுமார் 10,000க்கும் மேற்பட்ட மதரஸாக்களுக்கு எவ்வித விசாராணையுமின்றி அரசு அங்கீகாரம் கொடுத்தது.  பங்களா தேஷ் நாட்டிலிருந்து ஊடுருவியவர்களுக்கு ஆதரவாக இருந்தது, இதன் காரணமாக மேற்கு வங்கத்தில் இஸ்லாமியர்களின் மக்கள் தொகை 15 சதவீதத்திற்கு மேல் கூடியது.  1947-ல் நாடு விடுதலை பெற்ற போது, மேற்கு வங்க மாநிலத்தில் இஸ்லாமியர்களின் மக்கள் தொகை 12 சதவீதமாக இருந்தது, 2011-ல் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில் 27 சதவீதமாக உயர்ந்துள்ளது.  சில மாவட்டங்களில் 60க்கும் மேற்படி விகிதசாரத்தில் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை கூடியுள்ளது.   மூர்ஷிதாபாத் மாவட்டத்தில் 66.27 சதவீதம் இஸ்லாமியர்கள்,  இந்த மாவட்டத்தை போலவே, 24 பர்கானா, பர்துவான், மால்டா, பிர்பூம் போன்ற மாவட்டங்களிலும் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை 50 சதவீதத்திற்கு மேல் உள்ளது.

        தேர்தல் காலங்களில் இமாம்களின் கட்டளைக்கு ஏற்ப இஸ்லாமியர்கள் வாக்களிப்பதால், ஆளும் மம்தாவும், இடதுசாரிகளும் போட்டி போட்டுக் கொண்டு சலுகைகளை அறிவிக்கிறார்கள்.  2006, 2011, 2016 ஆகிய மூன்று சட்ட மன்ற தேர்தலிலும், இஸ்லாமியர்களின் வாக்குகளே ஆட்சியை நிர்ணயம் செய்ய உதவியது.  மேற்கு வங்க சட்டமன்றத்தின் மொத்த உறுப்பினர்கள் 294 –ல் இஸ்லாமியர்கள் அதிக அளவில் வாழும் தொகுதி 125 ,  இந்த 125 தொகுதியும், மால்டா, முர்ஷிதாபாத், வடக்கு தீனேஷ்பூர், பிர்பூம், பர்துவான், தெற்கு மற்றும் வடக்கு 24 பர்கானா, கூச் பிகார் போன்ற மாவட்டங்களில் உள்ளடங்கிய தொகுதிகளாகும்.  2011-ல் நடைபெற்ற தேர்தலில் மம்தாவின் திருணாமுல் காங்கிரஸ் கட்சி 102 இடங்களை பிடித்தது,  2016-ல் நடைபெற்ற தேர்தலில் 90 இடங்களில் வெற்றி பெற்றதின் காரணமாக ஆட்சி அமைக்க முடிந்தது.    2016-ல் சட்ட மன்ற தேர்தலின் போது, மம்தா தனது தேர்தல் பிரச்சாரத்தை இஸ்லாமியர்கள் அதிகம் வாழும்  மால்டா மாவட்டத்திலிருந்து துவங்கினார்.   இஸ்லாமியர்கள் வாழும் பகுதிகளில் வாக்கு கேட்கும் வால் போஸ்டர் கூட, இஸ்லாமிய பெண்கள் அணியும் உடையை போல் அணிந்து, நமாஸ் செய்வது போல் வாக்கு கேட்கும் படி அச்சடிக்கப்பட்டது. 

        மம்தாவின் மருமகனும், பாராளுமன்ற உறுப்பினருமான அபிஷேக்  பானர்ஜி,  வாக்கு சேகரிப்பை துவங்கிய இடம் பீர்பூம் மாவட்டத்தில் உள்ள ராணிகஞ்ச்  தொகுதி வேட்பாளர் நர்கீஸ் பானுவுக்கு ஆதரவாக வாக்கு கேட்டார்.  வாக்கு கேட்கும்  பொழுது,   Insha Allahtalla  Muslim  Bhai Bon Bhalo thakam     என்று கூறிய பின்னர் வாக்கு கேட்டார்.  இது இஸ்லாமியர்களை தாஜா செய்வது போல் அமைந்தது.   தேர்தலில் மம்தாவின் கட்சி, ஜமாத்-இ-உலாமா-ஹிந்த் என்ற அமைப்புடன் கூட்டு வைத்துக் கொண்டார்கள்.  இந்த  அமைப்பின் பொதுச் செயலாளர் சித்திக்குல்லா சௌத்ரி என்பவர் பர்துவான் மாவட்டத்தில் உள்ள கட்வா தொகுதியில், திரிணாமுல் காங்கிரஸ் சின்னத்தில் நிறுத்தி வைக்கப்பட்டார்.   2016-ல் நடைபெற்ற தேர்தலில் மம்தா மொத்த தொகுதியில் சுமார் 20 சதவீதம் இஸ்லாமியர்களுக்கு தேர்தலில் நிற்க வாய்ப்பு கொடுத்தார், இதில் மம்தா  கட்சியை தவிர்த்து கூட்டணியில் கூட இஸ்லாமியர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக சீட் பங்கீடு செய்யப்பட்டது.

                                                                                ...தொடரும்

- ஈரோடு சரவணன்