மோடியின் 'நரசிம்ம' அவதாரம்

மோடியின் 'நரசிம்ம' அவதாரம்

கன்னியாகுமரியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் தென் மாவட்டங்களுக்கான திட்டங்களை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். 

தென் மாவட்டங்களுக்கான ரூ.40 ஆயிரம் கோடி திட்டங்கள்: 

* மதுரை - ராமநாதபுரம் நான்குவழி சாலை துவக்கம்.

* மதுரை - செட்டிக்குளம் (7.3 கி.மீ.,) பறக்கும் பாலம், செட்டிக்குளம் - நத்தம் நான்குவழி சாலை.

* ராமேஸ்வரம்- தனுஷ்கோடி ரயில்பாதை, தனுஷ்கோடி ரயில் நிலையம்.

* பனக்குடி கன்னியாகுமரி இடையே நான்கு வழிச்சாலையை முழுமைப்படுத்துதல்

* குமரி மாவட்டம் பார்வதிபுரம், மார்த்தாண்டம் மேம்பாலங்கள்

* மதுரை- சென்னை தேஜஸ் ரயில்

* புதிய பாம்பன் ரயில் பாலத்துக்கு அடிக்கல்

அன்னை பகவதி ஆட்சி செய்யும் இடம் கன்னியாகுமரி. பாரத தாயின் காலடியை தாங்கி நிற்கும் இடமும் இதுதான். நாம் பெறப்போகும் பெரும் வெற்றிக்கு இந்நிகழ்ச்சி எடுத்துக்காட்டாக இருக்கும். பிரதமர் மோடி நரசிம்ம அவதாரம் எடுத்துள்ளார். இதன் மூலம் நம்மை இனி எந்த நாடும் எதிர்க்காது. பயங்கரவாதிகளுக்கு பதிலடி தந்ததால் பிரதமரை நாடு போற்றுகிறது. பிரதமரும், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவும் ஒருமித்த சிந்தனை உள்ளவர்கள். நாம் பெறப் போகும் வெற்றியை இந்த நாடு கண் குளிர பார்க்கப் போகிறது என்று துணைமுதல்வர் பன்னீர்செல்வம் பேசினார்.