மே 23 தேர்தல் முடிவுக்கு பின் திரிணமுல் காங்கிரசின் அடித்தளமே ஆட்டம் காணப்போகிறது - பிரதமர் நரேந்திர மோடி

மே 23 தேர்தல் முடிவுக்கு பின் திரிணமுல் காங்கிரசின் அடித்தளமே ஆட்டம் காணப்போகிறது - பிரதமர் நரேந்திர மோடி

லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ள பிரதமர் மோடி, நேற்று, மேற்கு வங்க மாநிலத்தில், பா.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார்.  

திரிணமுல் காங்., தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான,மம்தா பானர்ஜிக்கு, ஒரு விஷயத்தை கூற விரும்புகிறேன். நீங்கள் இருக்கும் இடத்திலிருந்து, டில்லி வெகு தொலைவில் உள்ளது. உங்களால், டில்லியை அடையவேமுடியாது. வரும், 23ல், ஓட்டுகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படும்போது, நாடு முழுவதும் தாமரை மலரும். மேற்கு வங்கத்திலும் தாமரை மலரும். உங்கள் கட்சியினர் எல்லாரும், உங்களை விட்டு, எங்களிடம் ஓடி வந்து விடுவர்.இப்போதே, உங்கள் கட்சியின், 40 எம்.எல்.ஏ.,க்கள், எங்களுடன் தொடர்பில் உள்ளனர். எந்த நேரமும், அவர்கள் எங்களிடம் வரலாம். உங்களின் அரசியல் அடித்தளமே ஆட்டம் காணப் போகிறது என்றார்.