மொஹல் தோட்டத்தை சுற்றிப்பார்க்கலாம்

மொஹல் தோட்டத்தை சுற்றிப்பார்க்கலாம்

தில்லி குடியரசு தலைவர் மாளிகையில் உள்ள மொஹல் தோட்டத்தை பிப்ரவரி 6 முதல் மார்ச் 10ம் தேதிவரை பொதுமக்கள் சுற்றிப்பார்க்க அனுமதிக்கப்படுவார்கள் என்று குடியரசு தலைவர் மாளிகை செய்தி குறிப்பு தெரிவித்துள்ளது. இதற்கான முன் பதிவை rb.nic.in/rbvisit/rbvisi எனற குடியரசு தலைவர் மாளிகையின் இணையதளத்தின் மூலமாகவும் செய்துகொள்ளலாம் என்றும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தோட்டம் ஆண்டு தோறும் பிப்ரவரி மார்ச் மாதங்களில் பொதுமக்கள் பார்வைக்கு திறந்து விடப்படுவது வழக்கம்.