மோடியின் செல்வாக்கு 52% ஆக உயர்வு - கருத்து கணிப்பு

மோடியின் செல்வாக்கு 52% ஆக உயர்வு - கருத்து கணிப்பு

புல்வாமா தாக்குதலுக்கு பிறகு பிரதமர் மோடியின் செல்வாக்கு 52 சதவீதமாக அதிகரித்திருப்பதாக டைம்ஸ் நவ் மற்றும் விஎம்ஆர் நடத்திய கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது.

பிரதமர் மோடி தலைமையிலான அரசின் இறுதிகட்ட செயல்பாடுகள் குறித்து பிப்ரவரி 5 முதல் 21 வரை டைம்ஸ் நவ் மற்றும் விஎம்ஆர் அமைப்புக்கள் கருத்துக்கணிப்பு நடத்தின. நாடு முழுவதும் 690 இடங்களில் நடத்தப்பட்ட கருத்துகணிப்பில் 14,431 பேர் கருத்து தெரிவித்துள்ளனர். செல்வாக்கு மிகுந்த தலைவர்களில் மோடி - 52 % ; ராகுல் - 27 %; மாநில தலைவர்கள் - 7.3 % பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஜனவரி முதல் வாரத்தில் நடத்தப்பட்ட கருத்துகணிப்பில் மோடிக்கு 44.4 % பேரும், ராகுலுக்கு 30 % பேரும், மாநில தலைவர்களுக்கு 13.8 % செல்வாக்கு இருப்பதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.