மோடியே மீண்டும் பிரதமர் ஆவார் - பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே போகரோட சீடர் புலிப்பாணி சித்தர்

மோடியே மீண்டும் பிரதமர் ஆவார் - பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே போகரோட சீடர் புலிப்பாணி சித்தர்

இப்பவுள்ள ஜோதிடர்கள் சொல்வது எல்லாம் இருக்கட்டும்.பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் போகரோட சீடர் புலிப்பாணி சித்தர். மகாராஜா யோகம் பற்றி கூறும் கருத்தும் ஐயா மோடியோட ஜாதக கிரக அமைப்பும். பலனும் சரியாக வருவது. அதிசயமாக உள்ளது. உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். புலிப்பாணி ஜோதிடம் என்ற நூலில் 70 வது பாடலில். உள்ளது.
 
பாடல்

கொள்ளப்பா கோள் ஒன்று சரமாய் நான்கில்

கொற்றவனே யோகசக்கர வர்த்தியாவான்.

அள்ளப்பா ஆனைபரி சேனைகூட்டம்.

அணிஅணியா யிருக்குமடா அநேகமாக

உள்ளப்பா உத்தமர்கள் அருளும்பெற்று

உலகிலுள்ள அரசரிடம் பகுதிவாங்கி

இல்லப்பா இவ்வுலகில் சேல்கண்ணாளை

இதமாகச் சுகித்திருப்பான், அனேகம்பேரே.

 விளக்கம்

லக்னத்திற்க்கு நான்கில் ஒரு கிரகம் இருக்க ஜாதகன் சக்கரவர்த்தியாகும் யோகம் உள்ளவன். அவனுக்கு யானை குதிரை கூட்டம். மிகவும் பலம் பெற்று விளங்கும். இச்சாதகன் உத்தமர்களின் அருள் பெற்றவனேயாவான். உலகிலுள்ள பல அரசர்களிடம் கப்பம் வாங்கி மக்களோடு இன்புற்று வாழ்வான் என புலிப்பாணி ஜோதிடம். விளக்கம் எழுதிய ஜோதிட ஞானவள்ளல். அம்மா வளர்மதி எழுதிவுள்ளார்கள்.

 அந்தகாலத்தில் சக்கரவர்த்திகளுக்கு அரசர்கள் கப்பம் கட்டுவார்கள். இன்று ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகம் மூலம். வரியாக வசூல் செய்யபடுகிறது. கடந்த ஐந்து ஆண்டில் ஐயா மோடி பல சிறு பெரு நாடுகளுக்கு சென்று வந்தது யாபகமிருக்கும் பல நாடுகளை தன் ஆளுமையின் கீழ் கொண்டு வரவேண்டும் என்ற எண்ணம் அவருக்கு அவர் ஜாதக ரீதியாகவே ஏற்பட்டுள்ளதை நாம் அறியலாம். பொதுவாக அவருடைய ஜாதக அமைப்பு ஒரு உயர்பதவி கிடைத்தால் ஒருமுறையோடு அவரைவிட்டு விலகாது. உதாரணம் குஜராத் முதல்வர் பதவி. அதேபோல் தான் பிரதமர் பதவியும். தொடர்ந்து பலமுரை பிரதமர் ஆவார்.

 இந்த கிரக அமைப்பு மட்டுமே அவருக்கு பதவிகளை தந்ததுன்னு சொல்ல முடியாது. ஆனால் இந்த கிரக அமைப்பும் காரணமாகும் என்பதும் மறுப்பதர்க்கில்லை. குருபார்வை பெற்று 10 ல் சுக்கிரன் 4 ஆம் அதிபதி சனியோடு கூடிய சுக்கிர திசையே முதல்வர் பதவி வர காரணமானது. அடுத்து வந்த சூரியதிசையும் பதவி அதிகாரம் தந்தது சந்திரதிசை நீசபங்க ராஜயோக அமைப்பால் பிரதமராக்கியது. அது இப்போதும் தொடர்கிறது. அடுத்துவரும் செவ்வாய் திசையும் லக்னத்தில் ஆட்சி பெற்றதால் இதேதான் செய்யும்.

எந்த ஐயமும் வேண்டாம். புலிப்பாணி சித்தரின் அருளால் ஐயா மோடியே மீண்டும் மீண்டும் பிரதமராவார். பலநாடுகளை தன் ஆளுமைக்கு கீழ்கொண்டு வருவார். நாம் செய்ய வேண்டியது ஓட்டு போடுவது மட்டுமே.

என்றும் அன்புடன்
ஜோதிடர் தங்கமலை 
செல் 8220745630