"மோடியை எதிர்ப்பவர்கள் ஊழல் வழக்குகளில் சிக்கியவர்கள்"

"மோடியை எதிர்ப்பவர்கள் ஊழல் வழக்குகளில் சிக்கியவர்கள்"

மகாகட்பந்தன் என்ற மகா கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சியின் தலைவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் பதியப் பட்டு வழக்கும், விசாரனையும் நடந்து வருகின்றது.  இவர்கள் நீதி மன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு நீதி மன்றங்களின் படிக்கட்டுக்களில் ஏறி இறங்கி வருகிறார்கள்.  இதை தான் மோடி அவர்கள் திருப்பூரில் நடந்த பொதுக் கூட்டத்தில்  பேசினார்.  மேலும் வானத்துக்கும் கடலுக்கும் உள்ளிட்டவைகளில் ஊழல் புரிந்தவர்கள் என்றார்.  பூடகமாக பேசியதை முழு விவரங்களுடன் பார்க்கலாம்.  மோடி மீது ஊழல் குற்றச்சாட்டுகள் வைப்பதற்கு பதிலாக, இஷ்ரத் ஜகான் என்கவுன்டர் வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு, பின்னர் நீதி மன்றத்தின் மூலமாக விடுவிக்கப்பட்டவர் என்பதையும் மறைத்து பொய் பேசி வருகின்றார்கள். 

          காங்கிரஸ் கட்சியின் தலைவர்களான ராகுல் காந்தி, சோனியா காந்தி, ப.சிதம்பரம் போன்றவர்கள் வழக்கிற்காக நீதி மன்றங்களின் படிக்கட்டுகளில் ஏறி இறங்கி வருகிறார்கள்.  இந்தியாவிலேயே ஒன்பது முறை ஜாமீன் கேட்டு நீதி மன்றத்தில் முறையிட்டவர் ப.சிதம்பரம்.  தான் அமைச்சராக இருந்த காலத்தில் தன்னால் நீதிபதி பதவிக்கு வந்ததின் காரணமாகவே, நள்ளிரவில் கூட முன் ஜாமீன் விசாரனை நடைபெற்றது.  இது கூட நீதி மன்ற வரலாற்றில் இல்லாத ஒன்றாகும்.    ப.சிதம்பரம் மீது ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு, அலைக் காற்றை ஊழலில் தொடர்ப்பு, தனது மனைவி நளினி சிதம்பரத்தின் மீது சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கு என இருந்தாலும், தனது தலைவியை காப்பாற்ற திருவாளர் ப.சிதம்பரம் நடத்திய ஒரு மோசடி நாடகம்.

          2011-2012-ம் வருடம் தாக்கல் செய்த  வருமான வரி கணக்கை மறு ஆய்வு செய்ய வருமான வரித் துறை ராகுல் காந்திக்கும், சோனியா காந்திக்கும் நோட்டீஸ் அனுப்பியது.  2011 - 2012 ம் நிதியாண்டில் அசோசியேட்டட் ஜோர்னல்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் மூலம் சோனியா ரூ.155.41 கோடியும், ராகுல் ரூ.154.96 கோடியும் வருமானம் ஈட்டி உள்ளனர். ஆனால் வருமான வரிதாக்கலில் ரூ.68.12 லட்சம் மட்டுமே வருமானம் பெற்றதாக கணக்கு காட்டி உள்ளனர். இதே போன்று காங்., கட்சியின் ஆஸ்கார் பெர்னாண்டசும் தனது ரூ.48.93 கோடி சொத்து மதிப்பை குறைத்து காட்டி வரி ஏய்ப்பு செய்ததாக வருமான வரித்துறையினர் குறிப்பிட்டுள்ளார்கள்.   இவ்வாறு தொடுக்கப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்ய பல முறை நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தும், நீதி மன்றங்களால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.   இறுதிய உச்ச நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்த போது, கீழ் நீதிமன்றத்தின் உத்திரவிற்கு மாறாக தீர்ப்பு வழங்க இயலாது என்றும், வருமான வரித் துறையினர் ஆய்வு செய்யலாம் என உத்திரவு பிறப்பித்தனர். 

         நீதி மன்றத்தின் மூலம் தப்பிக்க இயலாது என்பதால், வருமான வரித் துறை  அளித்த நோட்டீஸூக்கு எதிராக,  ராகுல் காந்தி மற்றும்  சோனியாவை பாதுகாக்க,   மத்திய நேரடி வரி விதிப்பு ஆணையத்தில் ப.சிதம்பரம்  தனது செல்வாக்கை பயன்படுத்தி சந்தேகத்துக்குறிய வகையில் ஒரு சுற்றிக்கையிட  வைத்தார்.  ஜனவரி 8ந் தேதி உச்ச நீதி மன்றத்தில் வழக்கு வரும் சமயம், மேற்படி சுற்றிக்கையை  வைத்து வழக்கிலிருந்து விடுவிக்க குள்ள நரி தந்திரத்தை செய்தார்.  31.12.2018ந் தேதியிட்ட  மத்திய நேரடி வரி விதிப்பு ஆணையத்தின் சுற்றிக்கை எண் 10 – 2018 ,  பொது மக்கள் ஆர்வம்  இல்லாத ஒரு நிறுவனத்தின் பங்குகள் வழங்குவதற்காக இயற்றப்பட்ட 1961-ம் வருட வருமான வரிச் சட்டம் 52(2) (viia)   ஒரு பொருந்தாமை பற்றிய தெளிவு என கூறி திருத்தப்பட்ட சுற்றிக்கையை பட்டியலிடப்படாத பங்குகள் தங்கள் நியாயமான சந்தை மதிப்பிற்கு கீழே மிகவும் விலையில் மாற்றுவதை நடைமுறைப்படுத்துவதை தடுக்கும் பொருட்டு, நிறுவனம் 56 பிரிவு, பங்குகளை திருத்துவதற்கு பரிந்துரைக்கப்படுகிறது,  என திருத்தம் செய்வதாக கூறி,  அரசுக்கு தெரியாமலே சுற்றிக்கை வெளியிடப்பட்டதாக கூறப்படுகிறது. 

          வருமான வரித் துறையில் உள்ள சில நேர்மையான அதிகாரிகளின் பார்வையினால், உடனடியாக பிரதமருக்கு தெரியப்படுத்தி, இதனால் ஏற்படும் விளைவுகளை எடுத்துக் கூறிய பின்னர், 4.1.2019ந் தேதி வருமான வரித் துறை ஆணையம் சுற்றிக்கை எண் 02- 2019  மூலம் முந்தைய   சுற்றிக்கையை ரத்து செய்து ஆணை பிரபித்தது.  ஒரு பொது சொத்தை கொள்ளையடித்த கொள்ளைகாரர்களுக்கு ஆதரவாக களம் கண்ட ப.சிதம்பரம், நேர்மையான அமைச்சாராக இருந்திருப்பாரா என்ற சந்கேம் எழுகிறது.   It is apparent from the legislative intent that clause (vii a) was inserted in section 56(2) of the Act as an anti-abuse provision to prevent the practice of transferring shares of a specified company for no or indadequate consideration என குறிப்பிட்டது தான் சோனியாவையும், ராகுல் காந்தியையும் காப்பாற்றும் பிரிவாகும்.   4.1.2019ந் தேதி காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர்கள் விவேக் தங்கே மற்றும் அகமது பட்டேல், வருமான வரித் துறை பிறபித்த சுற்றிக்கையை வரவேற்று, நேஷனல் ஹெரால்ட் வழக்கில் எங்களின் நிலைப்பாடு சரியானது என நிருபிக்கப்பட்டதாக தெரிவித்தார்கள்.   இதற்கு முக்கியமான காரணம், 8.1.2019-ல் விசாரனைக்கு வரும் போது, உச்ச நீதி மன்றத்தில் இந்த சுற்றிக்கையை காண்பித்து, ராகுல் காந்தியும், சோனியாவையும் காப்பாற்றலாம் என நினைத்தவர்களின் கனவில் மண் அள்ளிப் போட்டது போல் இருந்தது ரத்து செய்த செய்தி.   ஆனால் அடுத்த நாள் இந்த உத்திரவு, அரசியல் பழிவாங்கும் செயலாகும் என பேட்டி கொடுத்துள்ளார்கள். 

          மத்தியில் ஆட்சியிலிருந்த காலத்தில் மன்மோகன் சிங் பிரதமராக இருந்தாலும், சோனியாவின் கண் அசைவிலேயே ஆட்சி நடைபெற்றது.  2004-ம் வருடம் முதல் 2014 -ம் வருடம் ஏப்ரல் வரை இந்திய திருநாட்டை ஆட்சி செய்து வருவது காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாகும்இதில் செய்துள்ள ஊழல்களின் எண்ணிக்கை பட்டியல் போடுவதுடன், சில முக்கியமான ஊழல்கள் பற்றி மத்திய கணக்கு தணிக்கை அறிக்கை கூறுவதையும் பார்க்க வேண்டும்முக்கியமாக வெளியே விவாதிக்கப்படும் ஊழல்கள் (1) 2ஜி அலைக் கற்றை ஊழல், (2) நிலக்கரி ஒதுக்கீடு ஊழல் (3) காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் நடந்துள்ள ஊழல் (4) பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொடுக்கப்பட்ட லஞ்சம் (5) ஹெலிக்காப்டர் வாங்கியதில் ஊழல் (6)ஆந்திரக்ஸ் தேவாஸ் ஊழல் (7) பங்கு சந்தை ஊழல்  போன்ற ஊழல்களும் மற்றும் காங்கிரஸ் கட்சியின் தயாவால் கூட்டணி கட்சியினர் அடித்த கொள்ளைகள் மற்றும் காங்கிரஸ் ஆளும் மாநில அரசுகள் அடித்த கொள்ளைகளும் உண்டுஇதன் காரணமாக மத்தியில் உள்ள அரசு தனது ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள, மாநில கட்சிகள் அடித்த கொள்ளையை காட்டியே அரசை காப்பாத்திக் கொள்கிறார்கள்ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் அடித்த கொள்ளைகளின் பரிணாம வளர்ச்சியை சற்றே கானலாம்

           ஊழலில் திளைத்து போன காங்கிரஸ் மற்றும் தி.மு.க. வின் மிகப் பெரிய மோசடி 2 ஜி ஊழல்.  இது சம்பந்தமாக பிரதமர் மன்மோகன் சிங்கிடம் பல கேள்விகளை எழுப்பியும் பதில் கிடையாது.   அதில் சில கேள்விகள்,  2ஜி கோப்புகளை பிரதமர் வரவைத்து, தனது அதிருப்தியை ஒரு முறைகூட  தெரிவிக்காத்து ஏன்? அந்த துரதிருஷ்டவசமான முடிவு அமுலா்படுத்த  அனுமதித்த்து எவ்வாறு? அலைக்கற்றையின் அளவு குறித்த அமைச்சரவைக் கூட்டத்திற்கான வரையறையில் அலைக்கற்றையின் விலை சேர்க்கப்படாத்து ஏன்முதல்வரையறையில் விலை இடம் பெற்றிருந்த்தாகவும், தி.மு..வின் நெருக்கடியால் கடைசி நேரத்தில் அது கைவிடப்பட்டதாகவும் தெரிய வருகிறதுசட்டத்திற்குப் புறம்பாக  உரிமம் பெற்ற நிறுவனங்கள்,  குறுகிய காலத்தில் அதில் கணிசமான பங்குகளை மற்றொருவருக்கு விற்க எவ்வாறு அனுமதிக்கப்பட்டதுஅலைக்கற்றையின் சரியான விலையை அறிவதற்காக ஏலம் என்ற ஒளிவு மறைவற்ற முறையை பயன்படுத்துமாறு 2.11.2007ந் தேதி அமைச்சர் ராசாவிடம் கூறிய பிரதம மந்திரி 3.1.2008-ல் அது பற்றி கண்டும் கானாமலும் இருந்த்து ஏன்?  2.11.20007க்கம் 3.1.2008க்கும் இடைப்பட்ட காலத்தில் என்ன நடந்த்து, அல்லது தி,மு.. கொடுத்த நெருக்கடி அவ்வளவு கடுமையானதாக இருந்த்தா? என்பது  போன்ற கேள்விகளுக்கு இன்னு வரை பிரதமரிடமிருந்து விளக்கம் வரவில்லை.

                காங்கிரஸ் கட்சியும், தி.மு.க.வும் சிறப்பு நீதி மன்றத்தில் ஆதராம் கிடையாது என வழக்கு தள்ளுபடி செய்து விட்டது என தற்போது பேசி வருகிறார்கள்.  ஆனால் உச்ச நீதி மன்றத்தில் 21 அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடாக ஒதுக்கப்பட்டதாக கூறி, அவர்களின் உரிமத்தை ரத்து செய்தது ஏன் என்ற கேள்விக்கு பதில் இல்லை.  சோனியாவை கட்டாயப்படுத்தி தொலை தொடர்பு துறையை தி.மு.க. ஏன் கேட்டது என்பற்குறிய காரணத்தை தற்போது கூற இயலுமா?  இதை விட மோசமான ஊழல் நிலக்கரி ஊழல்.

             2011-ம் வருடம் மே மாதம் 12-14 தேதியிட்ட ஒரு தமிழ் வார பத்திரிக்கையின் முகப்பு அட்டையில் 26 லட்சம் கோடி…….. ஸ்பெக்ட்ரத்தை மிஞ்சும் நிலக்கரி ஊழல்  அம்பலத்திற்கு வரும் அதிர்ச்சி தகவல்கள் என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளிவந்துள்ளதுஆனால் 2012-ம் வருடம் செப்டம்பர் மாதம் தான் இது பாராளுமன்றத்தில் பற்றி எரிந்ததுஸ்பெக்ட்ரம் விஷயத்தில் என்ன நடந்த்து என்று எனக்கு தெரியாதுதவறே நடக்கவில்லை என்று துறை அமைச்சர் ராசா சொன்னதை நான் நம்பினேன்இதற்கு மேல் எனக்கு அதில் எந்தப் பங்கும் இல்லைஎன பிரதமர் தெரிவித்தார்ஆனால் தன்வசம் வைத்திருந்த நிலக்கரி துறையில் மிகப் பெரிய ஊழல் நடந்துள்ளது என்பது எவ்வாறு தெரியாமல் போனது, விக்கரமாதித்தன் கதையாக மாறிவிட்டது.

           2004-ல் ஆட்சிக்கு வந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் மத்திய நிலக்கரித் துறை அமைச்சராக இருந்த சிபுசோரன் ஒரு கொலை வழக்கில் கைதாகி சிறை செல்ல அந்த்த் துறையை பிரதமராக இருந்த மன்மோகன் சிங் தனது நேரடி கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டார்அந்த  சமயத்தில் மட்டும் 63 சுரங்கங்கள் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டன.  2004லிருந்து 2010 வரை 168 சுரங்கங்களுக்கு உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளனஇதில் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டது 113 சுரங்கங்கள்தனியாருக்கு விடப்பட்ட சுரங்கங்களில் நிலக்கரியின் அளவு 21.69 பில்லியன் டன்கள்இழ்ப்பீடு சம்பந்தமாக அரசு தெரிவித்த கருத்து, நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும், மின் தேவையையும் கவனத்தில் கொண்டு என்ற வார்த்தையை பயன்படுத்தி தவறுகளுக்கு பரிகாரம் தேட அரசு .முயற்சித்தது.

          இதில் 26 லட்சம் கோடி அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்பதற்குறிய கணக்கு, இன்றைய மார்க்கெட் நிலவரப்படி 1டன் நிலக்கரியின் விலை ரூ2500 என்றாலும், இதில் உற்பத்திச் செலவு மற்றும் போக்குவரத்துச் செலவு போக நிகர லாபம் 1டன்னுக்கு ரூ1250 கிடைக்கும்ஆனால் அரசு தனியாருக்கு விடப்பட்ட சுரங்கங்களில் வெட்டி எடுக்கும் நிலக்கரிக்கு டன் 1க்கு ரூ100 மட்டுமே மத்திய அரசுக்கு ராயல்டியாக கொடுத்தால் போதும் என அரசு அறிவித்த்து. இதனால் 21.69 பில்லியன் டன் விற்பனை செய்தால் அரசுக்கு கிடைக்கும் லாபம் ரூ26.91 லட்சம் கோடி ரூபாய்..   இதற்குறிய விளக்கத்தை கூட பாராளுமன்றத்தில் வைக்கவில்லை.  காங்கிரஸ் கட்சி ஊழல் குற்றச்சாட்டிலிருந்து தப்பிக்க,  நிலக்கரி ஒதுக்கீடு சம்பந்தமான கோப்புகள் கானவில்லை என உச்ச நீதிமன்றத்தில் அரசு தகவல் தெரிவித்த்துபிரதமரை காப்பதற்காகவே, சட்ட அமைச்சர் தன்னிச்சையாக சி.பி..யின் பிரமான வாக்குமூலத்தை திருத்தியதுஆகவே மிகப் பெரிய ஊழல் நடந்த போதும் வருங்கால பிரதம மந்திரியாக சித்தரிக்கப்படும் ராகுல் காந்தி  இது பற்றி இன்நுவரை வாய் திறக்கவில்லை

          2008-ல் அமெரிக்காவுடன் இந்தியா போட்டுக் கொண்ட அணுசக்தி ஒப்பந்தத்துக்காக அரசை ஆதரித்த இடது சாரிகள் தங்களது ஆதரவை விலக்கிக் கொண்டார்கள்இதன் காரணமாக பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டதுஇந்நிலையில் அரசை காப்பதற்காக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நம்பிக்கை வாக்கெடுப்பின் போது அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க எதிர்கட்சி உறுப்பினர்களுக்க கோடிக் கணக்கில் லஞ்சம் கொடுக்க்பட்ட சம்பவம், விஞ்ஞான ரீதியாக கொள்யைடிப்பதில் காங்கிரஸ் கட்சியின் கைதேர்ந்தவர்கள் என்பதை காட்டுவதாக உள்ள காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் அடித்த கொள்ளைகள்சில கொள்ளைகளை பார்த்தாலே இதன் விபரீதம் நன்கு புரியும்அவசர விளக்கு வாங்கும் போது 1 விளக்கின் சந்தை விலை ரூ920 , கல்மாடி வாங்கியது ரூ2,623 ஒரு விளக்கின் விலையில் வாங்கியுள்ளார்ரூ18,000க்கு சந்தையில் விற்கப்படுகின்ற வின்டோ .சியின். விலை, கல்மாடி வாங்கும் போது ரூ1,18,182க்கு வாங்கப்பட்டதாக கணக்கு காட்டப்பட்டுள்ளதுஇது போல் 110 வின்டோ .சி வாங்கப்பட்டுள்ளது, இதில் மட்டும் கோடிக்கு மேல் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

           2ஜியை ஜன்பத் ஆதரவு பெற்ற ஊழல் என்றால், 4ஜி எஸ்.பாண்ட் ஊழல் ரேஸ் கோர்ஸ் ஆதரவு பெற்ற ஊழல் என்றால் மிகையாகாதுஇஸ்ரோ விண்வெளி  ஆராய்ச்சி மையத்திற்கு 150 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றை கொடுக்கப்பட்டு இருந்த்து. இதற்கு பெயர் எஸ்-பாண்ட் அலைக்கற்றை என்று பெயர்இந்த எஸ் பாண்டிலிருந்து தான் சன், டாடா, ஏர்டெல் என்று பல சேனல்கள் டி.டி.ஹெச் ஒளிபரப்பை நடத்துகின்றனகாலியாக இருந்த எஸ்.பாண்ட்- வைத்து இஸ்ரோ வியாபரத்தைத் தொடங்கியது, இதில் தான் மிகப் பெரிய முறைகேடு நடந்துள்ளதாக மத்திய தணிக்கை துறை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளதுசுமார் 2 லட்சம் கோடிக்கு முறைகேடுகள் நடந்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

          முரளி தியோரா பெட்ரோலிய அமைச்சராக இருந்த போது எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் அளித்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாக சி..ஜி. அறிக்கை தெரிவிக்கிறதுஇந்த முறைகேடுகள் 2006 முதல் 2008 வரையுள்ள காலக் கட்டத்தில் நடந்துள்ளதுசி..ஜி.அறிக்கையில் மூன்று முக்கியமான குற்றச்சாட்டுகளை வைக்கிறதுமுதலாவதாக  ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிட்( ஆர்..எல்) கெய்ர்ன் நிறுவனங்களுக்கு அரசு, எண்ணெய் துரப்பண பணியை 3 மாதங்கள் முதல் 12 மாதங்கள் வரை இஷ்டம் போல் நீட்டித்துத் தந்ததுஇரண்டாவதாக, எண்ணெய் எடுக்கப்படாத இடங்களுக்கான ஒப்பந்தங்களை தானே எடுத்துக் கொண்டு, மறு டெண்டர் விடுவதற்கு பதிலாக அரசு ஆர்..எல். மற்றும் கெய்ர்ன் நிறுவனங்களுக்கே ஒப்பந்தத்தை நீட்டித்து தந்ததுமூன்றாவதாக  ஆர்..எல். நிறுவனம், தனது மூலதன செலவுத் தேவைகளை 117 சதவீதம் அதிகரித்துக் ( 2004 -2006 கால கட்டத்தில்) காட்டியதுஅது அரசுக்கு வந்திருக்க வேண்டிய வருவாய்இதில் மோசடி நடந்துள்ளது என்பது, கேஜி 6 படுகையில் மே மாதம் 2004 முதல் 2006  அக்டேபர் வரையிலான கால கட்டத்தில் ரிலையன்ஸின் மூலதன செலவுகள் அதிகமாயிருப்பதை சி..ஜி கேள்வி கேட்டுக் துளைத்திருக்கிறதுஅதாவது துவக்க காலத்தில் மேபாட்டுத் திட்டத்தின் 2.39 பில்லியன் டாலர்  மூலதனச் செலவு பிடிக்கும் என ரிலையன்ஸ் கணக்கிட்டதுஆனால் 2006 அக்டேபரில் அதனை 5.19 பில்லியன் டாலராக ஆக்கிவிட்டது. இதில் தான் முறைகேடு நடந்துள்ளதுசி..ஜி யின் அறிக்கையின் படி முதல் மதிப்பீட்டுக்கும் இரண்டாவது மதிப்பீட்டுக்கும் உள்ள அதிரடி வித்தியாசம், அரசின் நிதிநிலையைப் பாதிக்கக்கூடியது. என்று குறிப்பிட்டுள்ளது.

         இந்திய கப்பற் படைக்கு 12 நீர்முழ்கி கப்பல்கள் வாங்க ராணுவ அமைச்சராக பிராணப் முகர்ஜி இருந்த போது ரூ19,000 கோடிக்கு பிரான்ஸ் நிறுவனமான Thales வுடன் ஒப்பந்தம் போடப்பட்டது.      நட்வர் சிங் மீது உணவிற்கு எண்ணெய் திட்டத்தில் நடந்துள்ள ஊழல் குற்றச்சாட்டினால்  பதவி விலகியதால், திரு .கே.அந்தோணி ராணுவ அமைச்சராக நியமிக்கப்படடார்நீர்முழ்கி கப்பல் வாங்கியதில் இடைதரகர் ஒருவருக்கு 4 சதவீத கமிஷன் கொடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. ராணுவ அமைச்சகம் ஒப்பந்தத்தில் கமிஷன் வழங்கப்பட மாட்டாது என்ற ஷரத்து இருப்பதாக கூறி, எவருக்கும் கமிஷன் வழங்கப்பட வில்லை என்றே வாதிட்டது. ஆனால் இடைத் தரகர்; அபிஷேக் வர்மாவிற்கு கமிஷன் தொகை ரூ500 கோடி சென்றதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் 18.2.2006ல் வழக்கு சி.பி.ஐக்கு மாற்றப்பட்டது, 20.12.2007 வரை சி.பி. எந்த வழக்கும் குற்றம் சட்டப்பட்டவர் மீது பதிவு செய்யப்பட வில்லை. இதன் பின்னர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுக்கப்பட்ட பின்னர் இந்த ஊழல் வெளிச்சத்திற்கு வந்தது.   இந்த ஒப்பந்தத்திற்கு முதன்மை ஊழல் தடுப்பு கண்காணிப்பாளர் திரு.என்.விட்டல் பல்வேறு எதிர்ப்புகளை தெரிவித்த பின்னரும், ஆட்சியில் இருப்பவர்கள் இதற்கு அனுமதி அளித்தார்கள்ஆகவே ஆளும் காங்கிரஸ் கட்சியின் அமைச்சர்களுக்கு ரூ500 கோடியில் ; பங்கு உண்டு என்றும் கூறப்பட்டது.

                பத்து ஆண்டுகளில் காங்கிரஸ் கூட்டணி செய்த முறைகேடுகள், மோசடிகள், ஊழல்கள், கொள்ளையடித்த விவரங்கள் இருந்தும்,  தங்களை அரிச்சந்தரனாக காட்டிக் கொண்டு வீதி உலா வருகிறார்கள்.   இதை தான் மோடி அவர்கள் திருப்பூரில் நடந்த பொதுக் கூட்டத்தல் கூறினார்.  இந்த பட்டியல் முடிவல்ல, சிதம்பரம், திருமதி சோனியா காந்தியின் ஊழல்களை தனியாக விவரிக்கலாம். 

- ஈரோடு சரவணன்