மோடி அரசின் பொருளாதார நடவடிக்கைகளால் என்ன தான் நடந்தது?

மோடி அரசின் பொருளாதார நடவடிக்கைகளால் என்ன தான் நடந்தது?

மோடி அரசின் பொருளாதார நடவடிக்கைகளால் என்ன தான் நடந்தது? மோடி ஏன் பொருளாதாரம் பற்றி எல்லாம் பட்டியல் போட்டு விளக்குவதில்லை? 


நம்மூர் ஹார்வர்டு  பொருளாதார 'புலி'கள் எல்லாம்  இதற்க்கு  இந்த பணநீக்க நடவடிக்கை, ஜிஎஸ்டி தான் பொருளாதாரம் சரிய காரணம் என தொடர்ந்து சொல்லிட்டே இருக்காங்க. ஆனா மோடி ஏதும் கண்டுக்காம அவரு வேலையை அவரு பாட்டுக்கு செஞ்சிட்டே இருக்காரே இது என்னா கணக்கு என பலருக்கு அதுவும் குறிப்பாக தமிழ்நாட்டிலே பலருக்கு புரிவதில்லை. 


மோடி செய்வது அடிப்படை சீர்திருத்த நடவடிக்கை. இந்த அடிப்படை சீர்திருத்த நடவடிக்கை என்பது உடனேயும் நீண்டகால நோக்கிலேயும் பலனளிக்க கூடியது. ஆனால் ஏற்கனவே இருக்கும் மோசமான சுரண்டல் கட்டமைப்பை ஒழிக்க கூடியதால் அதிலே சுரண்டித்தின்று கொண்டிருந்த ஆட்கள் பாதிக்கப்படுவார்கள். 


பாதிப்பு பாதிப்புன்னா யாருக்கு பாதிப்பு என்னவிதமான பாதிப்பு அப்படின்னெல்லாம் பார்க்கனும் இல்லையா? 

ஏழை எளிய மக்களுக்கு பாதிப்பா? முதல்ல இந்த தூய்மை இந்தியா திட்டத்தை பற்றி  பார்ப்போம். 


தூய்மை இந்தியா திட்டம் வெறுமனே கழிப்பறை வசதி செஞ்சு கொடுத்தது, கழிப்பறை கட்டியதால் வேலைவாய்ப்பு வந்தெல்லாம் விடுங்க. கழிப்பறையை தொடர்ந்து பயன்படுத்தும்போது என்ன விளைவுகள் வருகின்றன. 


பொதுவெளியிலே இல்லாமல் கழிப்பறையை பயன்படுத்துவதால் தொற்று நோய்கள் வருவதும் அது பரவுவதும் தடுக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார நிறுவனம் காலரா, மலேரியா போன்ற தொற்று நோய்கள் 60  சதவீதம்  குறைந்ததாக சொல்லியுள்ளது. வயல்வெளிகளிலே கழிப்பதால் பாம்புக்கடி போன்ற விஷயங்களிலே இருந்தும் கீழே விழுவது, அடிபடுவது போன்ற விபத்துக்களும் குறைந்துள்ளது. 


வீட்டுக்கு அருகிலேயே அல்லது வீட்டின் ஒரு பகுதியான கழிப்பறையை பயன்படுத்துவதால் பெண்களுக்கு முழு பாதுகாப்பு கிடைக்கிறது. பாலியல் வன்கொடுமைகள், ஏச்சு பேச்சுக்கள் போன்றவைகளிலே இருந்து பெண்கள் தப்பித்து நிம்மதியாக பாதுகாப்பாக வாழ்கிறார்கள். 


இந்த விளைவுகளுக்கு பொருளாதார கணக்கு போடமுடியாது, ஆனால் இவை நடந்த போது பயனடைந்த கூட்டம் பாதிக்கப்பட்டிருக்கும் இல்லையா? 

நோய்க்கான மருந்து விற்பனை சரிந்திருக்கும், வழக்குகள் குறைவானதால் வழக்கறிஞர்கள் எல்லாம் பாதிக்கப்பட்டிருப்பார்கள் அதை பொருளாதார மந்தம் என்றால் எப்படி? வேலையிழப்பு என்றால் எப்படி? 

ஏழை எளியோர் எப்போதுமே வயல்வெளியிலே மலம் கழித்து, அதனால் வரும் துன்பங்களை அனுபவித்துகொண்டே இருக்கவேண்டும் இல்லையேல் அந்த கொடுமையிலே பணம் பார்க்கும் ஆட்களுக்கு வேலையிழப்பு ஏற்படும் என்றால் அது ஏற்றுக்கொள்ளக்கூடியதா? 


அடுத்து எல்லோரும் சமையல் எரிவாயு தரும் திட்டம். இது முன்பு விறகை வெட்டிவந்தோ அல்லது சாணத்தை தட்டி காயவைத்து வரட்டியாக்கி எரித்துகொண்டிருந்த பெண்கள் இப்போது பாதுகாப்பாக சுகாதாரமாக சமையல் எரிவாயுவிலே சமைக்கிறார்கள். அவர்களுக்கு சுவாசப்பை நோய்கள், ஆஸ்துமா, கண்பாதிப்பு எல்லாம் இப்போது வருவதும் இல்லை. அதற்கான மருந்துகளுக்கு தேவையும் இல்லை. வராது வந்த மாமணியாய் 'சிலிண்டர் பாபா' என கொண்டாடுகிறார்கள். முன்பு விறகு வெட்டியது, அதனால் செய்த வேலைகள் அதை சுற்றி  நடந்த வியாபாரம் எல்லாம் இப்போது இருக்காது. அதற்கு என்ன செய்வது? 

ஏழை பெண்களே எப்போதும் அடுப்பூதிக்கொண்டே இருங்கள் என விட்டுவிட வேண்டியதா?

அடுத்து இந்த சூரிய ஒளி சக்தி திட்டத்திற்கு வருவோம். 

இன்றைக்கு பார்த்தீர்கள் என்றால் இந்த  புவி வெப்பமயமாகுது  என போராட்டம் எல்லாம் இடதுசாரிகள் பண்ணூறாங்க. ஆனால் இதிலே மோடி எவ்வளவு சாதித்திருக்கிறார் என பேசாமல் அதிலே வேலை வாய்ப்பு இழப்பு என்கிறார்கள். 


தமிழ்நாட்டுக்கு தேவையான 15 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்திலே இப்போது 50 சதவீதம் போல கிட்டத்தட்ட ஏழாயிரம் மெகாவாட் மின்சாரத்தை சூரிய ஒளி மற்றும் காற்றாலை மூலம் பெறுகிறோம். இதனால் என்ன என்றால் இந்த மின்சாரம் நிலக்கரியால் கிடைத்திருந்தால் நிலக்கரியை வெட்டி எடுப்பது தொடர்பான வேலைகள், அதை எடுத்து வரும் தொடர்வண்டி தொடர்பான வேலைகள், அதை எரித்து மின்சாரம் எடுக்கும் அனல்மின் நிலையம் தொடர்பான வேலைகள் ஏதும் இப்போது நடப்பதில்லை. அதை விட அனல் மின்சாரத்தை விட சூரிய ஒளி  மின்சாரம் விலை குறைவாக இருப்பதால் அதற்கு கொடுத்த கடன் பலதும் இப்போது வராக்கடன். 


அதற்கு பதிலாக அதிகளவிலே சூரிய ஒளி தகடுகள் தயாரிப்பது, அதை நிறுவுவது அதற்கான மின்சேமிப்பு கலங்கள் தயாரிப்பு நிறுவுதல் போன்றவை நடக்கின்றன. 

உலக அளவிலான சூரிய சக்தி கூட்டமைப்பு ஒன்றை மோடி அரசு நிறுவி இங்கே மட்டுமல்ல உலக நாடுகளுக்கும் இங்கிருந்து ஏற்றுமதி ஆகும் வரையிலே செய்கிறது. 2030 இல் எவ்வளவு சூரிய மின்சாரம் தயாரிக்கமுடியும் என கணக்கு போட்டார்களோ அந்த இலக்கை 2018 ஆம் ஆண்டே மோடி அரசு எட்டிவிட்டது. 


எல்ஈடி பல்புகள், மின்சாரம் சேமிக்கும் சாதனங்கள் என மின் சேமிப்பை புகுத்தியதால் பல ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தினமும் மிச்சமாகிறது. மக்களுக்கும் மின்சார கட்டணம் குறைந்திருக்கிறது. இதனால் குண்டு பல்பு தயாரிப்போருக்கு வேலை குறைவு எனவே எல்லோரும் அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குங்கள் என சொல்லலாமா? 

இதனால் பெட்ரோல் உட்பட பலதுக்குமான தேவை குறைந்து உள்ளது. நாம் சம்பாதிக்கும் பணத்தை அடுத்த நாட்டிடம் கொடுப்பதா பொருளாதார வளர்ச்சி? 

நாமே நமக்கு தேவையான மின்சாரத்தை தயாரிப்பது தானே? இப்போது நாம் பழைய முறையிலான வேலையையே செய்து கொண்டிருக்கவேண்டும் என இருப்பதால் அதிலே வேலை இழப்பு ஏற்படும் என பயந்து கொண்டு புதியது ஏதும் செய்யாமல் இருப்பதா? 

வராக்கடன் வரும் என பயந்து கொண்டு அதே பழைய நிறுவனங்கள் செய்யும் வேலையை ஆதரித்துக்கொண்டு இருப்பதா? 


இந்த நிலக்கரி உற்பத்தி அதிகரித்து உள்ளது, நிலக்கரி வெட்டி எடுக்கும் இடத்துக்கு அருகில் இருக்கும் மின்நிலையத்துக்கே நிலக்கரி கொடுக்கவேண்டும் என மோடி அரசு கொண்டு வந்ததால் தேவையிலலாமல் நிலக்கரியை இடம் மாற்றும் வேலைகளும் இப்போது இல்லை. இது போன்ற சேமிப்பு நடவடிக்கைகளையும் வேலையிழப்பு என்றால் எப்படி சரி? 


அடுத்து இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி இரண்டுக்கும் வருவோம். முதலிலே பண மதிப்பிழப்பு எனும்  டெமோ. முன்பெல்லாம் பொருட்கள் பதுக்கல் இருக்கும். அவ்வப்போது  அதிகாரிகள் சோதனை செய்து பிடிப்பார்கள். இப்போது ஏன் அந்த செய்தியே வருவதில்லை? 


பணமதிப்பிழைப்புக்கு பின்பு ஒரு வருடம் வரை இந்த பதுக்கலை பிடித்தார்கள் அதை பிடித்தார்கள் என்ற செய்தி வந்து கொண்டே இருக்கும். செப்டெம்பர் 2017 இல் மகாராஷ்டிரா காய்கறி சந்தையிலே பல நூறு கோடி வரை பதுக்கல் பொருட்களை பிடித்தார்கள். அதெல்லாம் இப்போது நடக்கிறதா? 


இதிலே பாதிக்கப்பட்டது யார்? பொருட்களை பதுக்கி வைத்து விலையேற்றி விற்றவர்கள். அந்த பதுக்க, அந்த குடோன்களை நிர்வாகம் செய்ய, அதை பராமரிக்க இருந்த ஆட்களுக்கு வேலை போயிருக்குமா? கண்டிப்பாக. அவர்களுக்கு வேலை இருந்தே ஆகவேண்டுமா? 


அந்த மாதிரி லாபம் சம்பாதித்த ஆட்கள் அதை குடி, கூத்து என செலவு செய்திருப்பார்கள். சினிமாவிலே கொட்டியிருப்பார்கள். அந்த வேலைகளும் இப்போது கிடையாது. இதெல்லாம் வேலையிழப்பா? அடுத்து ஜிஎஸ்டிக்கு வருவோம். ஜிஎஸ்டி செய்தது என்ன? சரக்குந்து ஓட்டுனராக பணிபுரியும் நண்பர் Namo Csr Kadaneri அவர்களின் அனுபவத்திலே சொல்கிறார். 


முன்பெல்லாம் செக்போஸ்ட கடக்கனும் என்றால் முதலாளியின் ஆள் கூட வருவார். 

1000,500 ரூபாய் கட்டுப் பண்டல்களோட சரக்குந்திலேயே கூட வருவார். 

ஒரு சோதனை சாவடியை கடக்க குறைந்த பட்சம் இரண்டு நாட்கள் ஆகும். அதிகபட்சமாக பத்து நாட்கள் கூட ஆகும். கேட்கும் லஞ்சத்தை கொடுத்தாலும் வண்டியை சோதனை சாவடியை விட்டு விடமாட்டார்கள். 

இங்கிருந்து மும்பை போகவேண்டும் என்றால் நடுவிலே இருக்கும் சோதனை சாவடிகள்

ஹோசூர் சோதனை சாவடி

அதிப்பள்ளி சோதனை சாவடி

நிப்பானி சோதனை சாவடி

கோலாப்பூர் சோதனை சாவடி 


என  குறைந்தப்பட்சம்  நான்கு சோதனை சாவடிகளிலே பணமும் நேரமும் விரயம் ஆகும். இதுக்கு நடுவிலே நாக்கா எனும் உள்ளூர் ரவுடிகளுக்கு அவர்கள் பாதுகாப்பு தருவதற்கும் பணம் கொடுக்கவேண்டும். 


திருப்பூரிலே இருந்து மும்பை போக ஆறு நாள் ஆகும். 150 மணி நேரம் ஆகும். இப்போது 12 சக்கரம் கொண்ட டாரஸ் என்படும் வண்டியை திருப்பூரிலே ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு கிளப்பினால் திங்கட்க்கிழமை காலை 9 மணிக்கு மும்பையிலே சரக்கை இறக்கு இடத்திற்குபோய்விடலாம். 


இப்போது திருப்பூரிலே இருந்து மும்பை போக ஆகும் நேரம் வெறுமனே 22 மணி நேரம் தான். முன்பு எவ்வளவு? 150 மணி நேரம். இப்போது 128 மணி நேரம் சேமிக்கப்படுகிறது. 85 சதவீத நேரம் மிச்சம். கவனிங்க நேரம் பாதியாக அல்ல, முக்கால் வாசியாக அல்ல கிட்டத்தட்ட 90 சதவீதம் குறைந்திருக்கிறது. 


முன்பு பத்து நாள் ஆனது இப்போது ஒரே நாள் தான் ஆகும். இதனால் என்ன நன்மை என பார்க்காமல்,

இதனால் உழைப்போருக்கும் ஓட்டுனருக்கும் என்ன பயன் என சொல்லாமல் 

இவர்கள் என்ன சொல்லுகிறார்கள்? யாருக்கு எல்லாம் வேலையிழப்பு என பாருங்கள் என்கிறார்கள். ஜிஎஸ்டியால் சோதனை சாவடிகளை நீக்கியதால் யாருக்கெல்லாம் வேலை இழப்பு?


சோதனை சாவடியை நடத்தியவர்கள்

சோதனை சாவடியிலே லஞ்சம் வாங்கிக்கொண்டு இருந்தவர்கள்

அந்த லஞ்சத்தால் பயன்டைந்தவர்கள்

சரக்கு வண்டியிலே அந்த லஞ்சப்பணத்தோடு கூட வந்த அதிக ஆட்கள்

பத்து நாட்கள் கூட சோதனை சாவடியிலே ஓட்டுனர்கள் எல்லோரும் இருந்ததால் அங்கே நடந்த டீக்கடை, சாப்பாட்டுகடை, சாராயக்கடை உட்பட பல வியாபாரங்கள். 


இதெல்லாம் வேலை போனது தானே என்றால் ஆமாம் போனது தான். அதெல்லாம் போகத்தான் வேண்டும். இப்போது இவர்கள் டோல்கேட் ஐ நீக்கவேண்டும் என்கிறார்கள். நாளைக்கு மோடி அரசு நீக்கிவிட்டால் அதுக்கும் இதையே சொல்லுவார்கள். 


இதிலே அடுத்தது இந்த வண்டி தயாரிக்கும் நிறுவனங்கள். இப்போது பத்து நாள் ஆகும் சரக்கு போக்குவரத்து ஒரே நாளிலே நடந்துவிடுகிறது எனவே முன்பு பத்து வண்டி தேவைப்பட்ட சரக்கை இன்றைக்கு ஒரே வண்டியை வைத்து பத்து முறை ஓட்டி அனுப்பிவிடலாம். இதனால் புதிய வண்டிகளுக்கான தேவை குறைவு. அதை தயாரிப்பவர்கள், அதை ஓட்டுபவர்கள் எல்லோருக்கும் வேலை இழப்பு. 


அதே நேரத்திலே இந்த நேரமிச்சம் பொதுமக்களுக்கு ஏழைகளுக்கு என்ன பலனை கொண்டு வந்திருக்கிறது என பார்த்தால் அதன் பலன் அளவிட முடியாதது. பொருட்களின் விலை குறைந்திருக்கிறது. பணவீக்கம் மிகவும் குறைவாக இருக்கிறது. விலைவாசி உயர்வு இல்லை. 

இதுவும் கொஞ்ச நாளைக்குத்தான் இது சரியாக சரியாக மீண்டும் முன்பு போலவே உற்பத்தி பெருகும். ஏன்னா 2014 ஐ விட இப்போது சராசரியாக இருமடங்கு அதிகம் வண்டிகள் விற்கின்றன. 


அதாவது முன்பு 100 வண்டிகள் விற்றுக்கொண்டிருந்த இடத்திலே 200 வண்டிகள் விற்கின்றன. இந்த வருடம் அந்த 200 என்பது 190 ஆகியிருக்கிறது. இது தான் பெரிய பிரச்சினையாம். 


இந்த ஐந்து வருடத்திலே அசுர அபிரிமிதமான வளர்ச்சி என்றால் அதை பார்ப்பதை விட்டுவிட்டு இதோ பத்து வண்டி விற்கவில்லையே நான் என்ன செய்ய கேட்டால் அது ஏன் என பார்க்கவேண்டாமா? 


இந்த இடத்திலே நாம் அதெல்லாம் முடியாது எல்லா இடங்களிலும் சோதனை சாவடி போடு அதிலே ஏகப்பட்ட பொருளும் நேரமும் வீணாகட்டும் அதிலே வேலை இழப்பு ஏற்படும் என்பதால் அதை நீக்கவே கூடாது என சொல்லமுடியுமா? 


இந்த கம்யூனிஸ்டுகள் அதைத்தான் சொல்கிறார்கள். இந்த அபத்தங்களை மோடி புள்ளி போட்டு விளக்கவேண்டும் என எதிர்பார்க்கிறார்களே அதை எப்படி மோடி ஏற்பார்? அவருக்கு என்ன வேறு வேலையில்லையா? இந்த ஹார்வர்டு பொருளாதார 'புலி'களுக்கு எல்லாம் விளக்கிக்கொண்டிருக்கவேண்டுமா? 


இப்போதும் வெளிப்படையாக பண வரசெலவு செய்பவர்களுக்கு பிரச்சினையே இல்லை. நான் இருக்கும் இடத்திலே ஒரு கட்டிடம் கட்டுபவர் வருடத்திற்கு நான்கு அல்லது ஐந்து அடுக்குமாடி கட்டிடங்களை கட்டி விற்றுக்கொண்டே இருக்கிறார். நான் இருக்கும் வீதிக்கு அடுத்த வீதியிலே மூன்று மாதத்திலே ஒரு அடுக்குமாடி கட்டிடம் கட்டி இப்போது முடித்து விற்றும் விட்டார். 


எல்லா பணமுமே கணக்கிலே தான். எல்லாத்தையுமே காசோலையாகத்தான் வாங்குவார். பணமாக வாங்குவது என்ற பேச்சுக்கே இடமில்லை. அதே போல வாங்க வருபவர்களும் வருகிறார்கள். 


ஆனால் சென்னையிலேயே பல லட்சம் வீடுகள் விற்காமல் கிடக்கிறதே ஏன்? அதெல்லாம் கணக்கிலே வராத பணத்தை போட்டு கட்டியவை. வாங்க வருபவரும் அதே போல் கணக்கிலே வராத பணம் மூலம் வாங்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். 


கவனிங்க. விலை பிரச்சினை இல்லை. விற்று வரும் பணமுமே கணக்கிலே வராததாக இருக்கவேண்டும் நோட்டுகளாக கொடுக்கவேண்டும் என எதிர்பார்க்கீறார்கள். அப்படி வர யாரும் தயாராக இல்லை. இப்போது என்ன செய்ய? அதெல்லாம் காலியாக கிடக்கிறது. 


இப்படி பண வரவு செலவு செய்து கொண்டிருந்த எல்லா கட்டிடம் கட்டும் ஆட்களும் இப்போது ஏதும் செய்வதில்லை. அவர்களிடம் வேலை செய்து கொண்டிருந்தவர்களுக்கும் வேலை இல்லை. என்ன செய்யலாம்? பழைய படியே கணக்கிலே வராமலே ஊரை ஏமாற்றிக்கொண்டிருக்கட்டும் என விட்டுவிடலாமா? 

இதே போல் மோடி அரசு இன்னும் பல வேலைகள் செய்கிறது. அது என்ன என பார்த்தால் 


விமான நிலையத்திலே முழு உடல் சோதனை கருவிகளை நிறுவுவது. இதனால் கடத்தல் குறையும் அதுவும் குறிப்பாக தங்கம் கடத்துதல். அதிலே ஈடுபட்டிருப்போருக்கு வேலையிழப்பு ஏற்படும். 


குற்றவாளிகளின் முழு விவரத்தை உடனடியாக பார்க்கும் வகையிலே எல்லா குற்றவியல் தகவல்களையும் மத்திய மாநில அளவிலே தனித்தனியே இருக்கும் விவரங்களை இணைக்க மத்திய அரசு வேலை செய்து அதை 90% முடித்துவிட்டது. இப்போது  என்னவாகும் ? குற்றம் குறையும் ஆனால் அதை நம்பி பிழைப்பை ஓட்டியவர்களுக்கு, திருட்டு பொருள் நகை வண்டி வாங்கி விற்றவர்களுக்கு, கஞ்சா விற்றவர்களுக்கு வேலை  போகுமே ?


மோடி அரசு ஏழை எளிய மக்கள் வசதியாகவும் தன்மானத்தோடும் சுயமரியாதையோடும் வாழ வழி செய்கிறது. ஏழை எளிய மக்களின் ரத்ததை உறிஞ்சி உண்டு கொழுத்த கொசுக்களோ இன்றைக்கு கூவுகின்றன அதான் பிரச்சினை. 

நேற்றைக்கு நிறுவனங்களுக்கான வருமான வரியை மோடி அரசு குறைத்தவுடனே,  முந்தையநாள்  வரை ஐயோ பங்கு சந்தை விழுந்து விட்டதே, கார்ப்பரேட்டுகள் மூடப்படுகிறததே என கூவின களவாணிகள் எல்லாம் 


இன்றைக்கு மோடி அரசு கார்ப்பரேட்டுகளுக்கு உதவி செய்கிறார், பங்கு சந்தையை ஏன் தூக்கி நிறுத்தவேண்டும் என கேட்கின்றன. அதை பற்றி நாளை விரிவாக எழுதுகிறேன். 


இதிலே ஒன்றே ஒன்றைக்கு கூட யாரேனும் செய்திருந்தால். உலகை காக்க வந்த ரட்சகர் என கொண்டாடியிருப்பார்கள். இந்துவாக பிறந்து இந்து மதத்தை பின்பற்றி நடக்கும் மோடி என்பதால் பொறுக்க முடியாமல்  கதறுகிறார்கள்.

மோடி செய்வதிலே ஒரு பத்து சதம் செய்யக்கூடிய ஒரு ஆளை காட்டிவிடுங்கள். ஒரே ஒரு ஆளை காட்டிவிடுங்கள் பார்ப்போம். கிடையாதே? ஒருவர் கூட அதும் ஒரு பத்து சதம் கூட செய்ய தயார் கிடையாது. 

இந்த ஹார்வர்டு பொருளாதார  புலிளுக்கு    புளியை கூட கரைக்க தெரியாது. அவர்களுக்கு எல்லாம் மோடி பதில் சொல்லிக்கொண்டு இருக்கமாட்டார்.


- வி.ராஜாசங்கர்