மோடி தான் பலசாலி - ரஜினிகாந்த் கருத்து

மோடி தான் பலசாலி - ரஜினிகாந்த் கருத்து

நேற்று சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு நடிகர் ரஜினிகாந்த் அளித்த பதில்கள் சர்ச்சையை ஏற்படுத்தின. இன்று அவர் செய்தியாளர்களை சந்தித்து இது குறித்தும், வேறு பல விஷயங்கள் குறித்தும் விளக்கம் அளித்தார். அப்போது, "பாஜக ஆபத்தான கட்சியா? என்ற கேள்விக்கு நேற்று நீங்கள் அளித்த விளக்கம் புரியவில்லையே?" என்று செய்தியாளர்கள் கேட்டனர். 

அதற்கு ரஜினிகாந்த்,"எதிர்கட்சிகள் அப்படி நினைத்தால் அவர்களுக்கு அது ஆபத்தான கட்சி தானே." என்று பதிலளித்தார். மேலும்,"எதிர்கட்சிகள் பாஜகவை ஆபத்தான கட்சி என்று நினைக்கின்றன. பாஜகவை எதிர்க்க கூட்டணி அமைக்க முயற்சிக்கின்றனர். பத்து பேர் சேர்ந்து ஒருவரை எதிர்த்தால் அந்த பத்து பேர் பலசாலியா, இல்லை பத்து பேரை தனியாக சமாளிக்கும் ஒருவன் பலசாலியா?" என்று கேட்டார். 

இதனால், பிரதமர் மோடி தான் பலசாலி என்றும், அவரை எதிர்க்க எதிர்கட்சிகள் கூட்டணி அமைத்து வருவதாகவும் ரஜினிகாந்த் சூசகமாக கருத்து தெரிவித்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.