மோடி  தேசத் துரோகியா அல்லது காங்கிரஸ் கட்சி தேச துரோக கட்சியா?

மோடி தேசத் துரோகியா அல்லது காங்கிரஸ் கட்சி தேச துரோக கட்சியா?

நூறாண்டு கால காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி பாரத பிரதமர் மோடியை தேச துரோகி என பழித்துள்ளார்.  ரஃபேல் விமான பேரத்தில் நடக்காத ஊழலை நடந்ததாக பொய் பிரச்சாரம் செய்யும்  காங்கிரஸ் தலைவர் தேச துரோக குற்றச்சாட்டுகளை முன் வைத்து பேசுவது, நாட்டின் சுதந்திரத்திற்காக பாடு பட்ட காங்கிரஸ் கட்சியின் மதிப்புக்கு இழுக்காக முடிந்து விடும்.   கடந்த ஐந்தாண்டு காலமாக மத்தியில் ஆட்சி செய்யும் மோடியின் மீது ஊழல் புகார்களை வாசிக்க முடியவில்லை என்ற ஏக்கத்தையும், தன்னை பிரதமராக ஏற்றுக் கொள்ள கூட எந்த கட்சியும் முன்வாரத சூழ்நிலையில் மனம் பேதலித்து, உளரல் எடுக்க துவங்கி விட்டது.   உண்மையில் தேச துரோகி யார் என்பதை சற்றே பார்க்க வேண்டும்.

          பாரத தேசத்தின் நிலங்களை அந்நிய நாடுகளுக்கு தாரைவார்த்து கொடுத்த தேச விரோதிகள் யார் என்பதை பார்க்க வேண்டும்.  காங்கிரஸ் கட்சி ஆட்சியிலிருந்து போது தான்,   பாகிஸ்தானுக்கும், சீனாவிற்கும், இலங்கைக்கும், பங்களா தேஷ் நாட்டிற்கும்  நமது எல்லைப்பகுதியை  தாரை வார்த்து கொடுத்த சம்பவங்களை  பார்க்க வேண்டும்.  நேரு பிரதம மந்திரியாக இருந்த போது , பாகிஸ்தான் கைப்ற்றபட்ட காஷ்மீர் என்ற பகுதி உருவானது.  தேசத்திற்கு எதிரான செயல்பாடுகளில் ஈடுபட்ட முதல் காங்கிரஸ் தலைவர் நேரு.   1938-ல் அஸ்ஸாம் பகுதியில் இஸ்லாமியர்களுடன் கூட்டு மந்திரி சபை ஏற்படுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.  இந்நிலையில் காங்கிரஸ் கட்சியானது இஸ்லாமியர்களுடன் கூட்டு சேர்ந்து மந்திரி சபை அமைக்க வேண்டும் என நேத்தாஜி விரும்பம் தெரிவித்தார்.  இவரது விருப்பத்திற்கு ஆதரவாக சர்தார் பட்டேல் நின்றார்.  ஆனால் மௌலான ஆஸாத் எதிர்ப்பு காட்டினார்.   இறுதியில் காங்கிரஸ்  தலைமையில் மந்திரி சபை அமைக்கப்பட்டது.  இதன் காரணமாக இஸ்லாமியர்களின் ஊடுருவல் தடுக்கப்பட்டு, முஸ்லீம் லீக் விளையாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.   ஆனால் நேருவும் அவரது இடதுசாரி ஆதரவாளர்களும் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ்  அமைச்சர்கள் பதவியை ராஜினமா செய்ய வேண்டும் என வற்புறுத்தப்பட்டது.  இதன் காரணமாக ஆங்கில ஆதரவு பெற்ற சயீத் முகமது சதக்துல்லா தலைமையில் மந்திரி சபை அமைக்கப்பட்டது.   இதனால் 1941-ல்  கிழக்கு வங்கத்திலிருந்து ஊடுருவிய இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக நிலச் சீர்திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்டது.   அஸ்ஸாம் பகுதியின் பாதுகாப்பிற்கு ஊறு ஏற்படுத்தும் விதமாக செயல்பாடுகள் அமைந்தன.  இதற்கு வழி வகுத்து கொடுத்தவர் காங்கிரஸ்  கட்சியின் நேரு.  இது தேச துரோக செயலாக கருதலாமா?

          மோடியை தேச துரோகி என குற்றச்சாட்டும் ராகுல் காந்தி, தனது மூதாதையரான நேரு, இந்திரா காந்தி செய்த துரோக செயலை சற்றே திரும்பி பார்க்க வேண்டும்.  1947 ஆகஸ்ட் 15ந் நாடு விடுதலை பெற்ற பின்னர், இந்த நாட்டின் கவர்னர் ஜெனரலாக லார்டு மௌன்ட்பேட்டனை நியமிக்க வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது.  பாகிஸ்தான் என்ற நாடு உருவானவுடன், அந்த நாட்டின் கவர்னர் ஜெனரலாக ஜின்னா தன்னையே  நியமித்த போது, பாரத தேசத்தில் பாரதவாசி  ஒருவரை நியமிக்க  நேரு ஏன் முன்வரவில்லை, நேரு தடுத்தார் என்று கூறப்பட்டது. இந்தியாவின் ராணுவ தலைமை பொறுப்பு C-in-C என்பதை யாரிடம் ஒப்படைக்கப்பட்டது என்பதை சற்றே கவனிக்க வேண்டும்.   மௌன்ட் பேட்டன் ரகசியமாக பாகிஸ்தானுடன் பேசி இரண்டு நாடுகளுக்கும் தான் இருப்பதாக அறிவித்து விட்டு, பாகிஸ்தானில் ஜின்னாவிற்கு ஆதரவான ஆங்கில தளபதியை நியமித்தவர்,  இந்தியாவில் தானே அந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.  இந்த துரோக செயலுக்கு உடந்தையாக இருந்தவர் நேரு.  இதன் காரணமாக ஏற்பட்ட விளைவு பாரதத்தின் பல ஆயிரம் சதுர மைல்கள் பாகிஸ்தான் வசம் மாறியது.  இந்த  தேச துரோக செயலை செய்தவர் நேரு என்பது  புலப்படும்.  காங்கிரஸ் கட்சி ஆட்சியிலிருந்து போது தான்,   பாகிஸ்தானுக்கும், சீனாவிற்கும், இலங்கைக்கும், பங்களா தேஷ் நாட்டிற்கும்  நமது எல்லைப்பகுதியை  தாரை வார்த்து கொடுத்த சம்பவங்களை சற்றே திருப்பி பார்க்க வேண்டும்.  நேரு பிரதம மந்திரியாக இருந்த போது தான், பாகிஸ்தான் கைப்ற்றபட்ட காஷ்மீர் என்ற பகுதி உருவானது.  தேசத்திற்கு எதிரான செயல்பாடுகளில் ஈடுபட்ட முதல் காங்கிரஸ் தலைவர் நேரு. 

          மிகப் பெரிய தேச துரோகத்தை செய்தவர் நேரு.  நாடு விடுதலை பெற்றவுடன் காஷ்மீரை கைப்பற்ற வேண்டும் என பாகிஸ்தான் ராணுவம் படூன் மலைவாழ் மக்களை முன்னிறுத்தி போர் தொடுத்த போது, காஷ்மீரை காப்பதற்கு,  இந்திய ராணுவம் களத்தில் இறங்கி வெற்றி கரமாக தாக்குல் நடத்தியது,  மவுண்ட் பேட்டன் ஆலோசனையின் படி, போர் நிறுத்தம் அறிவிக்கும் முன்,  ஜெனரல் திம்மையா , நேருவை சந்தித்து இன்னும் சில தினங்கள் கழித்து போர் நிறுத்தம் அறிவிக்க வேண்டும், அதற்குள் பாகிஸ்தான் படைகளை முழுவதும் காஷ்மீரிலிருந்து வெளியேற்றி விடலாம் என்ற கோரிக்கை வைத்த போது, செவிசாய்க்க மறுத்தவர் நேரு.  இது பற்றி  கரியப்பா தனது வாழ்க்கை வரலாறு பற்றிய புத்தகத்தில்  Thimayya told Nehru the Army needed two weeks more to regain lost territory but Nehru was adamant.  Nehru’s attitude inexplicable, and left Teen Murthi Bhavan, the official residence of the PM, in disgust.     இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.  இதுதான் தேச பக்தியா?  இன்று வரை ஆஸாத் காஷ்மீர் பயங்கரவாதிகளை உருவாக்கும் மையமாக இருக்கிறது.  பாரத தேசத்தில் பயங்கரவாத செயல்களை செய்வதற்கு பயிற்சி கொடுக்கும் பகுதியாவும் விளங்குகிறது.  இந்த தேச துரோக காரியத்தை செய்த வழியில் வந்த ராகுல் காந்தி, மோடியின் மீது வைத்துள்ள விமர்சனம்  சிறுபிள்ளைத் தனமாது.

          மேலும் பாராளுமன்றத்தில் இது பற்றிய விவாதம் நடைபெறும் போது, நேரு கூறியதையும் நினைவுப் படுத்தி  பார்க்க வேண்டும்,  டாக்டர் சியமா பிரசாத் முகர்ஜி எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போது, புல் பூண்டு கூட முளைக்காத பகுதி என இறுமாப்பாக பதில் அளித்தார்.

          நேருவின் ஆட்சியில் அக்சைய சென் பகுதி,  இந்திரா காந்தி ஆட்சியில் கச்ச தீவு, நரசிம்மராவ் ஆட்சியில் தீன்பிகா பகுதிகள் தாரைவார்த்துக் கொடுக்கப்பட்டன.  இது தேச துரோக செயலாக ராகுல் காந்திக்கு தெரியவில்லையா.  இந்தியா சீனா எல்லை பிரச்சினை என்ற புத்தகத்தில்  மவுண்ட்பேட்டன் வெளியிட்ட வரைபடத்தைப் பற்றி குறிப்பிட்டுள்ள செய்தி, 1954-ல் நேருவின் முன்னிலையில் எல்லைகள் சீனாவிற்கு ஆதரவாகவே மாற்றி அமைக்கப்பட்டதாகவும்,. குறிப்பிடப்பட்டுள்ளது.     அருணாசல பிரதேசம் இந்தியாவின் ஒரு அங்கம் என்பதை மாற்றி,  அருணாசல பிரதேசத்தில் உள்ள இரண்டு fishtails  பகுதியை  சர்வே ஆப் இந்தியா சீனாவின் பகுதியாக காட்டி வரைப்படத்தை வெளியிட்டது.  இதன் காரணமாக 1962-ல் சீனா மேற்படி பகுதியை தங்களது என சொந்தம் கொண்டாட துவங்கியது.  இந்த தவறு நடந்த காலம் நேரு பிரதமராக இருந்த காலம் .    இது தேச துரோகம் கிடையாதா.

          நேரு எப்பொழுதுமே தான் ஒரு இந்தியன் என்ற எண்ணம் கொண்டவர் கிடையாது.  I am the last Englishman to rule India .  He had himself admitted …… in my likes and dislikes I was perhaps more an Englishman than an Indian.  I looked upon the world from and Englishman’s standpoint.   என கூறியவரின் வம்ச வழியாக தன்னை முன்னிலைப் படுத்தும் ராகுல் காந்தியிடமே தேச பக்தி உள்ளதா என தெரியவில்லை.

          இந்தியாவிற்கும் சீனாவிற்கும் பாலமாக அமைந்த பகுதி திபெத்.  வடக்கு பகுதியின் பாரத எல்லைக்கு பாதுகாப்பு அரணாக விளங்கியது திபெத். சீனா திபெத்தை ஆக்கிரமிப்பு செய்த போது, ஐ.நாவில் திபெத்திற்கு ஆதரவாக குரல் கொடுக்க மறுத்தவர் நேரு.  ஐ.நா.வில் அங்கம் இல்லாத நாடு திபெத், எனவே தங்களுக்கு ஆதராவாக குரல் கொடுக்க இந்தியாவிடம் வேண்டுகோள் விடுத்த போதும், நேரு செவி சாய்க்க மறுத்து விட்டார்.  இதன் காரணமாக பாரத தேசத்தின் பாதுகாப்பிற்கும்,  பிரம்புத்திரா நதி பிரச்சினைக்கும் தீராத தலைவலியை சீனா கொடுத்துக் கொண்டிருப்பதற்கு காரணமாக அமைந்து விட்டது.  இது தான் தேச பக்தியாக என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்.   1954 ஏப்ரல் 29 ந்தேதி பஞ்சசீலா உடன்பாடு ஏற்பட்டது.  Agreement  on Trade and Intercourse between the Tibet region of China and India   குறிப்பிட்டுள்ளதை  மறுப்பு தெரிவிக்காமல் நேரு கையெழுத்திட்டார்.   எனவே நேருவின் வம்ச வழியாக தன்னை முன்னிலைப்படுத்தி வரும் ராகுல் காந்திக்கு தேச பக்தி எது என தெரியாது.  

          14.2.2019ந் தேதி 2,500 ராணுவ வீரர்கள் ஸ்ரீநகர் நோக்கி புறபட்ட போது, புல்வாமா மாவட்டத்தில் தற்கொலை தாக்குதலில் 45 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டது  கோழைத் தனமானது என சில தலைவர்கள் நீலிக் கண்ணீர் வடித்து அறிக்கைகளை வெளியிட்டுள்ளார்கள்.  அலிகார் பல்கலைகழக மாணவன் பாசிம் ஹிலால் தனது டுவிட்டரில்  HOW’s the Jaish? Great sir. என பதியவிட்டவனை வளர்த்தவர்கள் காங்கிரஸ் கட்சியின் இஸ்லாமிய தலைவர்கள் தேச பற்றுள்ளவர்களா.  ஆனால் தமிழகத்திலிருந்து அடுத்த முதல்வர் என்றும் அலப்பரை நடத்தும் தி.மு.க. இரங்கல் தெரிவிக்கவில்லை.   நாட்டு பற்றுயற்றவர்கள் என்பதையே இது காட்டுகிறது.  இது தேச துரோகம் கிடையாதா?  இவர்களுடன் கூட்டணிக்கு ஆலாய் பறக்கும் ராகுல் காந்தியின் பார்வைக்கு படாதா?  இலங்கையில் இந்திய ராணுவம் அனுப்பபட்டத்தை கண்டனம் செய்தது மட்டுமில்லை, தமிழ் இனத்தை அழித்த ராணுவம் என ராணுவத்தின் மீது குற்றச்சாட்டு சாட்டிய கருணாநிதியின் தி.மு.க. தேச துரோக கட்சியா இல்லையா என்பதையும் ராகுல் காந்தி விளக்க வேண்டும்.  அவசர நிலையின் போது பாதுகாப்பு கேட்டு இத்தாலி தூதரகத்தில் தஞ்சம் புகுந்த சோனியாவின் குடும்பம் தேச பற்று கொண்ட குடும்பமா என்பதையும் விளக்க வேண்டும்.

நாட்டில் இஸ்லாமிய பயங்கரவாதமும், பயங்கரவாத தாக்குதல்களும் நடத்ததுணை போன சிமி இயக்கத்திற்கு ஆதரவாக உச்ச நீதிமன்றத்தில் வழக்காடியவர் சல்மான் குர்ஷித் , இவர் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவர். பாகிஸ்தானில் மோடி ஆட்சியை அகற்றினால் தான் பாகிஸ்தானுடன் சுமுகமான உறவு ஏற்படும் என பேசிய மணிசங்கர் அய்யர் இருக்கும் இடம் காங்கிரஸ்.  இவர்களை  அருகில் வைத்துக் கொண்டு தேச பக்தியை பற்றி பேசுவது சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது.  

- ஈரோடு சரவணன்