மோடி படத்துக்கு தடையில்லை சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு

மோடி படத்துக்கு தடையில்லை சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு

பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து, பி.எம்., நரேந்திர மோடி என்ற படம் தயாரிக்கப்பட்டு உள்ளது; இது, ஹிந்தி, தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் எடுக்கப்பட்டுள்ளது.தேர்தல் நேரத்தில் வெளியாவதால், இந்த படத்துக்கு தடை விதிக்கக் கோரி, காங்., பிரமுகர் அமன் பன்வார், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். 

இந்த மனு மீதான விசாரணை நேற்று நடந்தது. மனுதாரர் சார்பில் ஆஜரான, காங்., மூத்த தலைவரும், வழக்கறிஞருமான, அபிஷேக் சிங்வி,லோக்சபா தேர்தல் நடக்கும் இந்த சமயத்தில், இந்த படத்தை வெளியிடுவது, தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயல்; இது, பா.ஜ.,வின் பிரசார படமாக எடுக்கப்பட்டுஉள்ளது என்று கூறினார். 

இதையடுத்து, நீதிபதிகள், இந்த திரைப்படத்துக்கு, தணிக்கை வாரியம், இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. தணிக்கை வாரியம் அனுமதியளிக்காத நிலையில், இந்த விவகாரத்தில், நாங்கள் தலையிட விரும்பவில்லை; இந்த படத்தை வெளியிடுவதற்கு தடை விதிக்க முடியாது. தணிக்கை வாரியம் அனுமதியளித்த பின், படத்தில் ஆட்சேபகரமான கருத்துகள் இருந்தால், அது பற்றி, மனு தாக்கல் செய்யலாம் என்று உத்தரவிட்டனர்.