மோடி பிறந்த வாரம்..! இனி சேவை வாரம்..!

மோடி பிறந்த வாரம்..! இனி சேவை வாரம்..!

தில்லியில் பாஜக பொதுச் செயலாளர் அருண் சிங் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:

பிரதமர் மோடியின் பிறந்தநாள் செப்டம்பர் 17-ஆம் தேதி வருகிறது. பிரதமர் நீண்ட காலம் நலமுடன் வாழ வேண்டும் என்பதற்காக, நாடு முழுவதும் செப்டம்பர் 14-ஆம் தேதி முதல் ஒரு வாரத்துக்கு சேவை வாரம் கடைப்பிடிக்க திட்டமிட்டுள்ளோம். இந்த வாரத்தில் வறுமையில் வாடும் மக்களுக்கு தேவையான நலதிட்ட உதவிகளில் கட்சி தொண்டர்கள் ஈடுபடவுள்ளனர். பொது மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை தீர்த்து வைப்பதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டும் பிரதமரின் பிறந்தநாளை சேவை வாரமாக கொண்டாடினோம். 

சேவை வாரத்தின் முதல் நாளில் தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கட்சித் தலைவர் அமித் ஷா, செயல் தலைவர் ஜெ.பி.நட்டா ஆகியோர் செல்லவுள்ளனர். அங்கு நோயாளிகளுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி தந்து பழங்கள் வழங்கவுள்ளனர் என்று அவர் கூறினார்.