மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் - முலாயம் சிங்

மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் - முலாயம் சிங்

பிரதமர் திரு நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்று சமாஜவாதி கட்சியின் நிறுவனத் தலைவரும், எம்.பி.யுமான முலாயம் சிங் மக்களவையில் வாழ்த்து தெரிவித்தார்.பாஜக எம்.பி.க்களும் மேஜைகளைத் தட்டி முலாயமின் கருத்துக்கு வரவேற்பு தெரிவித்தனர். ஆனால், எதிர்க்கட்சி எம்.பி.க்களின் முகம் வாடிய நிலையில் காணப்பட்டது. ஒவ்வொருவரையும் முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்லும் மோடியின் முயற்சிகளைப் பாராட்டுகிறேன் என்றார் அவர். 

முலாயமுக்கு அருகில், ஐக்கிய முற்போக்கு கூட்டணித் தலைவர் சோனியா காந்தி அமர்ந்திருந்தார். முலாயமின் பேச்சைக் கேட்ட அவர் சற்று பதைபதைப்புடன் காணப்பட்டார்.