யாசீன் மாலிக்கின் ஜேகேஎல்எப் அமைப்புக்கு தடை - மத்திய அரசு நடவடிக்கை

யாசீன் மாலிக்கின் ஜேகேஎல்எப் அமைப்புக்கு தடை - மத்திய அரசு நடவடிக்கை

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஆலோசனை கூட்டத்தில், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் யாசீன் மாலிக் அமைப்புக்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டது. 

இதையடுத்து பிரிவினைவாதத் தலைவர் யாசீன் மாலிக்கின் ஜம்மு-காஷ்மீர் விடுதலை முன்னணி (ஜேகேஎல்எப்) அமைப்புக்கு மத்திய அரசு வெள்ளிக்கிழமை தடை விதித்தது. யாசீன் மாலிக்கின் அமைப்பு, ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதம் செழிக்க ஆதரவளிக்கிறது. பயங்கரவாதத்தை சகித்துக் கொள்ள முடியாது என்ற கொள்கையை மத்திய அரசு கடைப்பிடித்து வருகிறது. எனவே, ஜேகேஎல்எப் அமைப்புக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.