யாசீன் மாலிக் அமைப்புக்கு தடை - பிரதமருக்கு காஷ்மீர் பண்டிட்டுகள் நன்றி

யாசீன் மாலிக் அமைப்புக்கு தடை - பிரதமருக்கு காஷ்மீர் பண்டிட்டுகள் நன்றி

முன்னதாக, காஷ்மீரில் பிரிவினைவாதத்தையும், பயங்கரவாதத்தையும் ஊக்குவித்து வருவதாக கூறி, ஜேகேஎல்எஃப் அமைப்புக்கு தடை விதித்து, மத்திய அரசு கடந்த வெள்ளிக்கிழமை நடவடிக்கை மேற்கொண்டது. சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின்கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஜம்மு-காஷ்மீரில் கடந்த 1989-இல் காஷ்மீர் பண்டிட் சமூகத்தினர் படுகொலை செய்யப்பட்டதில் இந்த அமைப்புக்கு முக்கியப் பங்கு உண்டு. இந்த படுகொலைகளின் எதிரொலியாக, அந்த மாநிலத்தைவிட்டே பண்டிட் சமூகத்தினர் வெளியேறினர்.

காஷ்மீர் தொடர்பான பாகிஸ்தானின் சதித் திட்டங்களை முறியடிக்க பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை மனதார வரவேற்கிறோம். காஷ்மீர் பண்டிட்டுகளுக்கு நேர்ந்த துயரத்தை, இனப்படுகொலையாக அங்கீகரிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஜேகேஎல்எஃப் அமைப்புக்கு தடை விதித்து, துணிச்சலான, நேர்மையான முடிவை மேற்கொண்டமைக்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இது, ஒட்டுமொத்த காஷ்மீர் பண்டிட் சமூகத்தினரின் தியாகம் மற்றும் கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றியாகும் என்று  காஷ்மீர் பண்டிட் சமூக சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.