யாருக்கு கூட்டணி யாரோ!!!

யாருக்கு கூட்டணி யாரோ!!!

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் வேளையில் அரசியல் கட்சிகள் தேர்தல் வியூகங்களை வகுப்பதிலும், கூட்டணிகளை முடிவு செய்வதிலும் மும்முரமாக இறங்கியுள்ளன.

நேற்று தமிழகத்தை சேர்ந்த பாஜக தொண்டர்களுடன் காணொளி காட்சி மூலம் உரையாடிய பிரதமர் நரேந்திர மோடி, தமிழகத்தில் வாஜ்பாய் கலாச்சாரத்தை பின்பற்றி தன் பழைய நண்பர்களை வரவேற்க தயாராக இருப்பதாகவும், கூட்டணிக்கான கதவுகள் திறந்தே இருப்பதாகவும் கூறினார். பாஜக வாஜ்பாய் ஆட்சி காலத்தில் திமுக,அதிமுக இரண்டு கட்சிகளுடனும் வெவ்வேறு காலத்தில் கூட்டணி வைத்திருந்ததது. அதனால், பிரதமர்  எந்த கட்சியை குறிப்பிடுகிறார் என்பது நிச்சயமாகத் தெரியவில்லை. 

பிரதமரின் இந்த பேச்சு குறித்து  கருத்து தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்று திட்டவட்டமாக கூறியுள்ளதுடன், தமிழக நலனில் சிறிதும் அக்கறை காட்டாத மோடி அரசு என்று பலவாறாக சாடியுள்ளார்.

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜனும் பாஜக திமுகவுடன் கூட்டணி வைக்காது என்று கூறியுள்ளார்.

அதிமுகவின் நிலைப்பாடு என்ன என்று பார்த்தால்,"தமிழகத்திற்கு நன்மை செய்யும் கட்சிக்கு தான் ஆதரவு." என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.

தேர்தல் நெருங்கும் போது அரசியல் காட்சிகள் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.