யாரும் சதம் அடிக்கல...சரி...எல்லாரும் சேர்ந்து கூட சதம் அடிக்கலையே!!!

யாரும் சதம் அடிக்கல...சரி...எல்லாரும் சேர்ந்து கூட சதம் அடிக்கலையே!!!

இந்தியா நியூசிலாந்து இடையேயான நானகாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 92 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இந்திய கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்திய அணியில் சஹால் அதிகபட்சமாக 18 ரன்கள் எடுத்துள்ளார். நியூசிலாந்தின் போல்ட் 10 ஓவர்கள் பந்து வீசி 21 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். தொடரின் முதல் மூன்று போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்று ஏற்கனவே தொடரை கைப்பற்றிவிட்டது.