"யார் பாசிஸ்ட் ? எந்த கட்சி பாசிஸ்ட் கட்சி "

"யார் பாசிஸ்ட் ? எந்த கட்சி பாசிஸ்ட் கட்சி "

வரவிருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்கள் உள்ள நிலையில், தமிழகத்தில் தி.மு.க. காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இருப்பதை உறுதி செய்யும் விதமாக, திருவாளர் ஸ்டாலின் மத்தியில் ஆளும் பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி பாசிஸ்ட் ஆட்சி என்றும், மோடி ஒரு பாசிஸ்ட் என்றும் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளார்.  உண்மையில் 1967லிருந்து தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கும் கட்சி தி.மு.க. மற்றும் அ.இ.அ.தி.மு.க. .  1967-ல் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி விட்டு ஆட்சிக்கு வந்த தி.மு.க. முதல் ஓர் ஆண்டு மட்டுமே அமைதியான ஆட்சியாக இருந்தது.  அதாவது திருவாளர் சி.என். அண்ணாதுரை முதல்வராக இருந்த வரையும், பின்னர் அரியனை ஏறிய கருணாநிதி தனது ஆட்சிக் காலத்தில் பாசிஸ்ட்டாக உருவாகினார் என்றும்,  வாய் வார்ததைகளால் மட்டுமே ஜனநாயகம் பேசியதும், செயல்படுகள் அனைத்தும் ஒரு ஹிட்லரை நினைவுப் படுத்தும் வகையில் நடைபெற்றது என்பதை மறந்து விட்டு ஸ்டாலின் மோடியை பற்றிய விமர்சனத்தை வைக்கிறார்.   சரி யார் பாசிஸ்ட் எந்த கட்சி பாசிஸ்ட் என்பதை சில சம்பவங்கள் மூலம் விவரங்களை பார்க்கலாம்.

          தன்னை ஒரு முழுமையான ஜனநாயகவாதியாக காட்டிக் கொள்ளும் தி.மு.க. தலைவர் கருணாநிதி  ஒரு பாசிஸ்ட் என்றால் பலருக்கு கோபம் வரும்.  தி.மு.க. கட்சியே பாசிஸ்ட் கட்சி.  1949 –ல் துவங்கப்பட்ட தி.மு.க.வில் 70 வருடங்களாகவே தலைவராக வீற்றிருந்தவர்கள் திருவாளர் அண்ணாதுரை மற்றும் கருணாநிதி தற்போது ஸ்டாலின்.   ஏன் தி.மு.க.வில் தலைவர்களுக்கு பஞ்சமா என்ற கேள்வியை கேட்க கூடாது.  கருணாநிதி  மாவட்ட செயலாளர்கள் அனைவரும் அவரின் கட்டுப்பாட்டில் உள்ளவர்கள்.  கடந்த 30 ஆண்டுகளாகவே இவர்கள் தான் மாவட்ட செயலாளராக தேர்வு பெறுவார்கள்.  இவர்களுக்கு போட்டியாக யார் வந்தாலும், அராஜகத்தின் மூலம் தடுக்கப்படுவார்கள்.   தா.கிருட்டிணன் கொலைக்கு காரணமே, பதவி சண்டைதான் என்பதை மறந்து விடக் கூடாது.   திருவாளர் கருணாநிதி தலைமை பதவியை எப்படி பிடித்தார் என்ற வரலாறு, பாசிச வழியில் பிடித்தார் என்பது உண்மையாகும். 

                        2006ம் ஆண்டு கருணாநிதி முதல்வராக பதவியேற்றார்முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பாராட்டு விழாக்களும் படோடாபங்களும் பரபரத்தனகருணாநிதி அறிக்கைகளை வெளியிடாத பத்திரிக்கைகளின்உரிமையாளர்களைகாலை ஐந்து மணிக்கே தொலைபேசியில் அழைத்து கருணாநிதி திட்டத் தொடங்கினார்பாராட்டு விழாக்களுக்கு நிருபர்களை அனுப்பாத ஊடகங்களை வறுத்தெடுத்தார்.

        ஊடகங்களின் மீது நடத்திய பாசிஸ தாக்குதல்கள் -  தனக்கு சாதகமாக செய்தி வெளியிட்ட ஊடகங்களுக்கு அரசு விளம்பரத்தை வாரி வாரி வழங்கினார். ஊடகங்களை எப்படி வழிக்கு கொண்டு வருவது என்ற கலையை உலகுக்கே உணர்த்தினார் கருணாநிதி என்று சொன்னால் மிகையாகாது. விளம்பரங்களை லஞ்சமாகக் கொடுத்து ஊடகங்களை வளைத்தார்வளையாத ஊடக அதிபர்களை நேரில் அழைத்துப் பேசினார்ஊடகங்களில் உள்ளே இருக்கும் பங்குத் தகராறில், காவல்துறையை நுழைத்து குளிர்காய்ந்தார்அதையும் மீறி அரசுக்கு எதிராக செய்திகளை வெளியிட்ட ஊடகங்களையும், நிருபர்களையும் வழக்கு போட்டு மிரட்டினார். ஊடகங்களை கருணாநிதி மிரட்டுவதற்கு அவதூறு வழக்குகளைப் பயன்படுத்தினார்.   அதற்கும் மசியாத பத்திரிக்கைகளின் ஆசிரியர்களை பொய் வழக்குகளில் கைது செய்தார்அழகிரியின் ரவுடிகளை விட்டு முக்கிய ஊடகங்களை மிரட்டினார்.

           தமிழக மக்கள் தனது விருப்பத்திற்கு ஏற்ப சிந்திக்க வேண்டும்.  அனைத்து அரசியல் கட்சித் தலைவர்கள், ஊடகவியலாளர்கள், சமூகப்பணியாளர்கள் என அனைத்து தரப்பினரும் , விருப்பத்திற்கு ஏற்ப நடக்க வேண்டும் என எதிர்பார்ப்பு கருணாநிதிக்கு அதிகமாகவே உண்டு.    ஆசைகளையும், விருப்பங்களையும் தனக்குத் தானே உருவாக்கிக் கொண்ட திரு.மு.கருணாநிதி, அதை மீறுகிறவர்கள் மற்றும் விமர்சக்கிறரவர்கள் மீது தாக்குதல்கள் நடத்திய வரலாறு உண்டு.  தன்னையும், தனது ஆட்சியையும் விமர்சனம் செய்த காரணத்திற்காக, கல்கி, குமுதம் பத்திரிக்கை அலுவலங்கள் தாக்கப்பட்டன, சூரையாடப்பட்டன.   துக்கள் ஆசிரியர் திரு. சோ தாக்கப்பட்டதும், துக்ளக் இதழ்கள் தீயிட்டு கொழுத்தப்பட்ட சம்பவங்களும் உண்டு.   நவசக்தி, நாத்திகம், அலை ஓசை போன்ற பத்திரிக்கைகள் நிறுதப்பட காரணமாக இருந்தவர் தி.மு.க. தலைவர்.  இது பாசிஸ நடைமுறையில்லையா?  

          மத்தியில் தகவல் தொழில்நுட்ப துறையை வாதாடி பெற்று தனது மருமகன் தயாநிதி மாறனுக்கு கொடுத்த கருணாநிதி, தயாநிதி மாறனின் பாசிஸ கொடுமைகளை கண்டும் காணாமலும் இருந்தார்.  தினமலர் நாளிதழ், மலர் தொலைக் காட்சி துவங்க விண்ணப்பித்து, மூன்று ஆண்டுகள் வரை உரிமம் வழங்காமல் தாமதம் செய்தது,  ராஜ் தொலைக்காட்சி மற்றும் விஜய் தொலைக்காட்சியில் செய்தி வரக்கூடாது என தடுக்கப்பட்டது.  மக்கள் மன்றம் என்ற பெயரில் கருணாநிதியின் அரசாங்கத்தை விமர்சனம் செய்யும் விதமாக நடத்தப்பட்ட நிகழ்ச்சியை , நிறுத்த உத்திரவிட்டதும், மீறினால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை செய்து செயலுக்கு பாசிஸம் என்ற பெயர் வைக்காமல், கருத்து சுதந்திரம் என்று கூற முடியுமா?

          கருணாநிதியின் ஆட்சியில் மின்வெட்டால் தமிழகம் முழுவதும் பாதிக்கப்பட்ட போது, போராடிய பொது மக்கள் மீது காவல் துறையிரை விட்டு கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்திய செயலுக்கு என்ன பெயர் வைக்கலாம்.  தஞ்சை கும்ககோணம் சலையில் ராஜகிரி என்னும் கிராமத்தில் தினசரி 10 மணி நேரத்திற்கு மேல் மின் வெட்டு இருந்த காரணத்தால், அக் கிராம மக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட அப்பாவி பொது மக்கள் மீது காட்டுமிராண்டித்தனமாக தாக்குதலையும் நடத்தி ஜாமீனில் வெளிவர இயலாத பிரிவுகளில் 250 அப்பாவி பொது மக்கள் மீது வழக்கு தொடுத்தது பாசிஸ செயல்பாடு என்பதை ஸ்டாலின் மறந்து விட்டு மோடியையும், மோடியின் ஆட்சியையும் பாசிஸ ஆட்சி என்கிறார்.   ஒரு பாசிசவாதி தனது குடும்பத்தை மட்டுமே கவனிப்பார் என்பதற்கு கருணாநிதியே ஒரு உதராணமாகும்.  தி.மு.க. ஒன்றும் சங்கர மடமல்ல, வாரிசு உரிமை கொண்டாடுவதற்கு என முழுக்கமிட்ட கருணாநிதி, சங்கர மடத்தை விட கேவலமான முறையில் செயல்படுத்தியவர்.

          2009 பிப்ரவரி மாதம் சென்னை உயர் நீதி மன்ற வளாகத்தில், வழக்கறிஞர்கள் மீது  கொடூரமான முறையில் தாக்குதல்கள் நடத்திய சம்பவம், கருணாநிதியின் பாசிச போக்கை காட்டுவதாகும்.  நூற்றுக் கணக்கான வழக்கறிஞர்கள் தாக்கப்பட்ட போதும், அதை தடுக்க முயன்றி நீதிபதியும் தாக்கிய சம்பவத்திற்கு வருத்தம் தெரிவிப்பதற்கு பதிலாக, தான் உடல் நலனின்றி மருத்துவ மனையில் இருப்பதாக நீலிக் கண்ணீர் வடித்தவர், ஆனால் மறு தினமே நடிகர்களுக்கு கலை மாமணி விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டது அவரின் பாசிச போக்கை காட்டுவதாக அமைந்தது.   இதே போல், சென்னை உயர்நீதி மன்ற வளாகத்திற்குள் டாக்டர் அம்பேத்கார் சிலை திறப்பு விழாவின் போது, கருணாநிதிக்கு கருப்பு கொடி காட்ட முற்பட்ட வழக்கறிஞர்கள் மீது,  கருணாநிதியின் கண் அசைவில்  கட்சியின் அடியாட்கள் வழக்கறிஞர்களை  கொடுமையாக தாக்கியதும், தாக்கிய போது காவல் துறையினர் வேடிக்கை பார்த்ததும் தி.மு.க.வின் பாசிச போக்கை காட்டுவதாக அமைந்துள்ளதை, திருவாளர் ஸ்டாலின் எவ்வாறு அழைப்பார்.

          ஈழத்தில் லட்சக்கணக்கான தமிழர்களை கொன்று குவிக்க துணை போன காங்கிரஸ் கட்சியை காப்பாற்ற, கருணாநிதி செம்மொழி மாநாடு நடத்தினர்.  இம் மாநாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்த கோவை, கடலூர், விழுப்புரம், மதுரையை  சார்ந்த 30 பேர்கள் மீது தேச துரோக வழக்கில் கைது செய்தது கருணாநிதி மற்றும் தி.மு.க.வின் பாசிச போக்கை காட்டுவதாகும்.   இன்றைக்கு தி.மு.க.வில் ஐக்கியமடைந்துள்ள பழ.கருப்பையா, கருணாநிதியை பற்றி விமர்ச்சித்து பத்திரிக்கையில் கட்டுரை எழுதியதற்காக, அவர் வீடு தாக்கப்பட்டது, அவரும் கடுமையாக தாக்கப்பட்டார்.  2010ல் ஜெயா டிவியில் ரபி பெர்ணான்டுடனான நேர்காணலில் கருணாநிதி ஈழத்துக்கு செய்த துரோகத்தையும், செம்மொழி மாநாட்டையும் ஒரு காட்டு காட்டென காட்டினார் இந்த பட்டிமன்ற பேச்சாளர். உடனே அவரது வீட்டுக்கு வந்த திமுக குண்டர்கள் அவரை சுவரோடு வைத்து அழுத்தி கொல்ல முயன்றார்கள். மறக்காமல் தாங்கள் யார் அனுப்பி வந்தோம் என்பதையும் அவருக்கு விளக்கமாக சொல்லி விட்டு எல்லா கண்ணாடி பொருட்களையும் அடித்து நொறுக்கி விட்டுப் போனார்கள். அப்போதே அடித்தவர்களுக்கும் அவருக்கும் சினிமா பைனான்சு பிரச்சினை என்று பொய் செய்திகள் வெளியாயின. இதை செம்மனே செய்தவர் கருணாநிதியும் அவரது அடியாட்களும்.

          இன்னும் பல சம்பவங்கள் உள்ளன.  தி.மு.க. ஆட்சியே ஒரு பாசிச ஆட்சி என்றால்  மிகையாகாது.  கருணாநிதி தான் தலைவராக வரவேண்டும் என்பதற்காக நடத்திய நாடகங்கள் மற்றும் குள்ளநரித் தனங்களை வெட்ட வெளிச்சமாகினால், பல உண்மைகள் வெளி வர துவங்கும்.

- ஈரோடு சரவணன்