யார் பிரதமர் என்று சொல்ல எதிர்க்கட்சிகளுக்கு தைரியமில்லை - ஒ.பன்னீர்செல்வம்

யார் பிரதமர் என்று சொல்ல எதிர்க்கட்சிகளுக்கு தைரியமில்லை - ஒ.பன்னீர்செல்வம்

10 ஆண்டு கால மத்திய காங்கிரஸ் ஆட்சியில் திமுக அங்கம் வகித்தது. அதனால், கருணாநிதியின் குடும்பத்தினர் மட்டும்தான் பயன்பெற்றனர். தமிழகம் பயன் அடையவில்லை. இதற்குப் பதில் கூற வழி இல்லாதவர்கள் எல்லாம் வாய் கூசாமல் பேசிக் கொண்டிருக்கின்றனர். இலங்கையில் தமிழினம் அழியக் காரணமாக இருந்ததுடன், தமிழகத்தை இருளில் மூழ்கச் செய்ததும் திமுக. "கூடா நட்பு, கேடாய் முடியும்' என்றும் "காங்கிரஸூடன் ஒட்டும் இல்லை உறவும் இல்லை' என்று அன்று கூறிவிட்டு இன்று கூட்டணி வைத்துள்ளனர். இதை தமிழக மக்கள் மறக்க மாட்டார்கள். 

சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் ராகுல் காந்தியை பிரதமர் என்று கூறிவிட்டு, கொல்கத்தாவில் நடந்த கூட்டத்தில் அதைச் சொல்வதற்குத் தைரியம் இல்லாதவர் ஸ்டாலின். அவர் அதிமுகவின் வெற்றிக் கூட்டணியை விமர்சிக்கிறார்.