ரசிகர்களை வைத்து விளம்பரம் தேடிய விஜய்

ரசிகர்களை வைத்து விளம்பரம் தேடிய விஜய்

சென்னை தாம்பரத்தை அடுத்த சோமங்கலம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. நடிகர் விஜய், உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியை காண சென்னை மட்டுமின்றி வெளிமாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள், வாகனங்களில் குவிந்தனர்.

விஜயை காண ஆவலோடு வந்திருந்த ரசிகர்கள், உரிய டிக்கெட்டுகளை வைத்திருந்தும் அரங்கத்திற்கு செல்ல அனுமதிக்கவில்லை என குற்றம்சாட்டினர். அரங்கத்திற்குள் மல்லுக்கட்டி செல்ல முயன்ற ரசிகர்களை போலீசார் தடியடி நடத்தி கலைக்க முயன்றனர். அதில் சிலருக்கு காயம் ஏற்பட்டது.

மேலும், பத்தாயிரம் இருக்கைகளை கொண்ட அரங்கத்தில், இருபதாயிரம் டிக்கெட்டுகளை அச்சிட்டு தங்களுக்கு விநியோகித்துள்ளதாக குற்றம்சாட்டிய ரசிகர்கள், டிக்கெட்டுகளை கிழித்தெறிந்தனர்.

பல கி.மீ. தூரம் கடந்து வந்திருப்பதாகவும், பலமணி நேரம் காத்திருந்து போலீசிடம் அடிவாங்கி தற்போது ஏமாற்றத்துடன் திரும்பி செல்வதாகவும் ரசிகர்கள் வேதனையோடு கூறினர்.