ரபேல் தீர்ப்பு - வரன் அமையும் முன்பே, பிறக்கப்போகும் குழந்தைக்கு பெயர் வைப்பரோ?

ரபேல் தீர்ப்பு - வரன் அமையும் முன்பே, பிறக்கப்போகும் குழந்தைக்கு பெயர் வைப்பரோ?

ரபேல் தீர்ப்பு குறித்து காங்கிரஸின் கொண்டாட்டம் படு அபத்தம். நேற்று உச்சநீதிமன்றம் ரபேல் தொடர்பாக அளித்த தீர்ப்பை வைத்துக்கொண்டு "மோடி ஊழல் செய்துவிட்டார் என்று காங்கிரஸ் கூறி வருகிறது.  இந்த தீர்ப்பின் ஒரு இடத்தில கூட, மத்திய அரசு முறைகேடு செய்துள்ளது என்று நீதிமன்றம் கூறவில்லை. இன்னும் சொல்லப்போனால் ஊழல் நடைபெற்றிருக்க கூடும் என்று சந்தேகம் கூட தெரிவிக்கவில்லை.

பிரஷாந்த் பூஷன் மற்றும் அருண் ஷோரி உச்சநீதிமன்றத்தில் சென்ற ஆண்டு, ரபேல் ஒப்பந்தத்தில் முறைகேடுகள் உள்ளன. விசாரணைக்கு உத்தரவிடுங்கள் என்று கோரினர். டிசம்பர் 2018ல் நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது. பின்னர் மறுசீராய்வு மனு தாக்கல் செய்தனர்.  இந்த மனுவை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. இது எல்லா வழக்குகளிலும் நடைமுறையில் உள்ள ஒன்று தான்.  இதை பெரிதாக  ஒன்றுமே இல்லை.

இதன் அடுத்த கட்டம், ஊழல் நடைபெற்றதற்கு முகாந்திரம் உள்ளதா என்று நீதிமன்றம் தீர்மானிக்க வேண்டும்.  இது முதல்படி.

ஒரு வேளை நீதிமன்றத்திற்கு சந்தேகம் ஏற்பட்டால் CBI விசாரணைக்கு உத்தரவிடும், இது இரண்டாம் கட்டம்.

CBI புலனாய்வு அறிக்கை வைத்து நீதிமன்றம் விசாரணை நடத்தும், இது மூன்றாவது கட்டம்.

வாத பிரதிவாதங்களை வைத்து நீதிமன்றம் தவறு நடைபெற்றுள்ளாதா இல்லையா என்று தீர்ப்பளிக்கும். இது கடைசி கட்டம்.

இவ்வாறாக பல கட்டங்கள் உள்ளன, வழக்கு முதல் படியில் ஏறுமா என்று கூட தெரியாது. எனவே நேற்றைய தீர்ப்பை காட்டி 'மோடி குற்றவாளி' என்று காங்கிரஸ் புலம்புவது அபத்தம்.

வரன் பார்த்துவிட்டு சம்மதம் தெரிவிக்கும் முன்னரே, பிறக்கப்போகும் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று யோசிப்பது,  எவ்வளவு அபத்தமோ அவ்வளவு அபத்தம் இன்று காங்கிரஸ் இந்த தீர்ப்பை கொண்டாடுவது.