ரபேல் வழக்கில் சிக்குவது மோடி இல்லையாம் ராகுல் காந்தியாம் C A G அறிக்கை மாட்டிக்கொண்ட காங்கிரஸ்

ரபேல் வழக்கில் சிக்குவது மோடி இல்லையாம் ராகுல் காந்தியாம் C A G அறிக்கை மாட்டிக்கொண்ட காங்கிரஸ்

ரபேல் குறித்த CAG அறிக்கை இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி காங்கிரஸ் அரசை காட்டிலும் பாஜக அரசு அதிக விலை கொடுத்து ரபேல் விமானத்தை வாங்கியதாக தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தார்பாஜக தலைவர்கள், ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் ஆகியோர் இதுகுறித்த தகவல்களை மறுத்து வந்த போதிலும் தொடர்ந்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர் கட்சிகள் பிடிவாதமாக இருந்தனமேலும் எதிர்க்கட்சிகள் அனைத்தும் எங்களுக்கு CAG அறிக்கை வேண்டும் என்று கேட்டன இந்நிலையில் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட CAG அறிக்கை எதிர்க்கட்சிகள் தலையில் கல்லை போட்டதுபோல் அமைந்துவிட்டது.

காங்கிரஸ் போட்ட ஒப்பந்தத்தை விட 2.86 சதவிகிதம் குறைவான விலையிலேயே பாஜக அரசு ரபேல் விமானத்தை கொள்முதல் செய்துள்ளது என்றும் இது காங்கிரஸ் காலத்தில் செய்திருந்தால் 24 % அளவிற்கு இன்னும் குறைவாக இருந்திருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

 எனவே தற்போது ராகுல் காந்தி கூறிய தகவல்கள் பொய் என்பது இதன்மூலம் நிருபணம் ஆனது மட்டுமல்லாமல் 6 வருடங்கள் பிறகு குறைவான விலைக்கு ஒப்பந்தம் செய்துள்ள மோடி அரசாங்கம் தற்போது ராகுல் காந்தியை பார்த்து ஏன் 6 வருடத்திற்கு முன்னர் நீங்கள் அதிக விலைக்கு வாங்க ஒப்பந்தம் போடீர்கள் இப்போ சொல்லுங்கள் ரபேல் விவகாரத்தில் ஊழல் செய்தது காங்கிரஸ்சா.. இல்லை பாஜக வா.. என்று கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டனர்.

இப்போ ரபேல் வழக்கில் சிக்கிக்கொண்டது மோடி இல்லை ராகுல் காந்திதான் என்பது போல கதை மாறிவிட்டது  இது தேவையா  ராகுல்?