ரவி நதியில் புதிய அணைக்கட்டு  : அனுமதி வழங்கியது மத்திய அரசு

ரவி நதியில் புதிய அணைக்கட்டு : அனுமதி வழங்கியது மத்திய அரசு

பஞ்சாப் மாநிலத்தில் ஓடும் ரவி நதியின் குறுக்கே ஷாப்பூர்கண்டி என்ற இடத்தில்  புதிய அணைக்கட்ட மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனால், ரவி நதி நீர் பாகிஸ்தான் வழியாக சென்று கடலில் வீணாக கலப்பது தடுக்கப்படும்.  ஏற்கனவே, சிந்து நதி நீர் பகிர்ந்து கொள்ளுதல் தொடர்பாக இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஏற்பட்டுள்ள ஒப்பந்தபடி பஞ்சாப் மாநிலத்தில் பாயும் ரவி, பியாஸ், சத்லஜ் ஆகிய நதிகளின் நீரில் பாகிஸ்தான் உரிமை கோராது.

இந்த புதிய அணைக்கட்டு திட்டம் வரும் 2022 - 23 ஆண்டில் நிறைவடையும். இந்த அணையினால் பஞ்சாப் மாநிலத்தில் கூடுதலாக  5000 ஹெக்டேரும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 32,173 ஹெக்டேர் நிலமும் பாசன வசதி பெறும். அதோடு, பஞ்சாப் மாநிலம் 206 மெகாவாட் மின் உற்பத்தியும் செய்ய முடியும். இதனால், அந்த மாநில விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படும்.