ராகுலுக்கு ஹிமந்தா பிஸ்வாஸ் பதிலடி

ராகுலுக்கு ஹிமந்தா பிஸ்வாஸ் பதிலடி

அஸ்ஸாம் மாநிலத்தில் விவசாயிகளுக்கு பல சலுகைகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இதை பற்றி விமரிசித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டர் பதிவில்,"அஸ்ஸாம் மற்றும் குஜராத் மாநில முதல்வர்களை அவர்கள் தூக்கத்திலிருந்து எழுப்பும் முயற்சியில் காங்கிரஸ்  வெற்றி பெற்று விட்டது. ஆனால், பிரதமர் தான் இன்னமும் உறங்கிக்கொண்டிருக்கிறார். அவரையும் நாங்கள் எழுப்புவோம்." என்று கூறியிருந்தார்.

ராகுலின் இந்த விமர்சனத்திற்கு அஸ்ஸாம் மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வாஸ் பதிலடி கொடுத்துள்ளார். அவர் இதற்கு பதிலளித்துள்ள டிவிட்டர் பதிவில்,"1894ம் ஆண்டிலிருந்து பிரிட்டிஷ் ஆட்சியிலும் அதன் பின்னரும் 125 ஆண்டுகளாக துன்பப்பட்டு வந்த விவசாயிகளின் மேம்பாட்டிற்காகவே இந்த சலுகைகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. நான் இதனை 10 மாதங்களுக்கு முன்பே எனது பட்ஜெட்டில் அறிவித்து விட்டேன். உங்கள் குட்டி அரசியலால் எங்கள் உணர்வுகளை புண்படுத்தி விட்டீர்கள்." என்று கூறியுள்ளார். 

ஹிமந்தாவின் இந்த பதிலுக்கு பின்னராவது ராகுல் காந்தி பிரதமரை சீண்டுவதை நிறுத்துவாரா என்று அரசியல் வட்டாரத்தில் முணுமுணுத்து வருகிறார்கள்.