ராகுல் காந்திக்கு தேசிய மகளீர் ஆணையம் நோட்டீஸ்

ராகுல் காந்திக்கு தேசிய மகளீர் ஆணையம் நோட்டீஸ்

ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பேச்சுக்கு தேசிய மகளீர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ரபேல் குறித்த தனது பேச்சில் ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் குறித்தும் பிரதமர் நரேந்திர மோடி குறித்தும் தகாத வார்த்தைகளால் விமரிச்சித்திருந்தார் ராகுல் காந்தி.

பிரதமர் ரபேல் குறித்த தனது கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் தன்னை காப்பபாற்ற சொல்லி கெஞ்சிக்கொண்டு ஒரு பெண்ணின் பின்னால் ஒளிந்து கொண்டார் என்றும், அந்த பெண்ணால் வெறும் இரண்டரை மணி நேரத்திற்கு மேல் அவரை காப்பாற்ற முடியவில்லை என்றும் கூறியிருந்தார் ராகுல் காந்தி. (ரபேல் குறித்த விவாதத்தில் நிர்மலா சீதாராமன்  நாடாளுமன்றத்தில் தொடர்ந்து இரண்டரை மணி நேரம் உரையாற்றினார் என்பது இங்கே குறிப்படத்தக்கது)

இது குறித்து தனது கடும் கண்டனங்களை பதிவு செய்துள்ள தேசிய மகளீர் ஆணையத்தின் தலைவி ரேகா சர்மா,"நாட்டிற்கு முதல் மற்றும் ஒரே பெண் பிரதமரை தந்த கட்சியின் தலைவரிடமிருந்து  இப்படி பெண்களை குறித்தும் பிரதமர் குறித்தும் தரம் தாழ்ந்த பேச்சை எதிர்ப்பார்க்கவில்லை.நிர்மலா சீதாராமன் இந்த நாட்டின் ராணுவ அமைச்சர். ராகுல் காந்தி தனது கருத்துக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும். 'ஆணாக இருங்கள்' என்று பிரதமரை பார்த்து அவர் கூறுவது ஏன்?" என்று கூறியுள்ளார்.

ராகுல் காந்தியின் இந்த பேச்சை பிரதமர் உட்பட பலரும் கண்டனம் செய்திருக்கிறார்கள்.