ராகுல் காந்தியிடம் இந்த கேள்விகளை கேட்காதது ஏன் - அரசியல் விமர்சகர் பானுகோம்ஸ்

ராகுல் காந்தியிடம் இந்த கேள்விகளை கேட்காதது ஏன் - அரசியல் விமர்சகர் பானுகோம்ஸ்

அன்புமணியை கேள்விகேட்ட தமிழக ஊடகங்கள் இன படுகொலையை செய்த ராகுலிடம் ஏன் இந்த 4 கேள்வியை கேட்கவில்லைஅரசியல் விமர்சகர் பானுகோம்ஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட தமிழகம் வந்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் மாணவிகளிடம் கலந்துரையாடினார்.

அப்போது செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார் ராகுல் காந்தி ஆனால் அன்புமணியிடமோ, அல்லது பிரேமலதா விஜயகாந்திடமோ ஊடகங்கள் கேள்விகேட்ட மாதிரி ஊடகங்கள் கேள்வி கேட்கவில்லை ராகுல் காந்தியிடம் செல்ல பிள்ளைக்கிட்ட நடப்பது போன்று நடந்துகொண்டனர்.

இது தொடர்பாக கேள்வி எழுப்பியுள்ள அரசியல் விமர்சகர் பானு கோம்ஸ் ராகுலிடம் ஊடகங்கள் கேட்ட கேள்வியின் மூலம் ஒன்று தெளிவாகியுள்ளது. அது தமிழக ஊடகங்கள் ஒருதலை பட்சமாக செயல்படுகிறது என்பது தான்.

ராகுலிடம் ஏற்கனவே எழுதி கொடுத்த கேள்விகளை மட்டும் கேட்டுள்ளனர். அதே போன்று செய்தியாளர்கள் இந்த 4 கேள்வியை மட்டும் ராகுலிடம் கேட்டிருந்தால், ராகுலின் அரசியல் அறிவு அப்போது தெரிந்திருக்கும்.

1.       மோடி வேண்டாம் என்பதை தவிர நாங்கள் ஏன் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்றும்,கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் நீங்கள் செய்த சாதனைகள் என்ன என்பதையும் சொல்ல முடியுமா?

2.       உங்களின் கடந்த கால ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் நடந்ததை உங்களால் மறுக்க முடியுமா ? அதற்கு என்ன விளக்கம் தர போகிறீர்கள் ?

3.       தமிழக மக்கள் மீது உங்களுக்கு உண்மையாகவே அன்பு இருந்தால் காவேரி விஷயத்தில் நீங்கள் கர்நாடகத்திற்கு ஆதரவாக இருப்பது ஏன் ? கர்நாடகத்தில் முன்னர் உங்களின் ஆட்சியில் தான் தமிழர்கள் அடித்து உதைக்கப்பட்டு அவர்களின் சொத்துகள் சேதப்படுத்தப்பட்டது

இப்போதும் கர்நாடகத்தில் உங்கள் ஆதரவில் தான் ஆட்சி நடைபெறுகிறது நீங்கள் நினைத்தால் ஒரே நாளில் காவேரியின் முழு உரிமையை தமிழகத்திற்கு வழங்க முடியும் அதற்கு உங்கள் பதில் என்ன ?

4.       பிரதமர் வேட்பாளர் மோடி என பாஜக செய்வது சர்வாதிகார ஆட்சி என்று கூறும் நீங்கள் பல தலைவர்கள் அரும்பாடுபட்டு வளர்த்த காங்கிரஸ் என்ற தேசிய கட்சியை 70 ஆண்டுகளாக ஒரே குடும்பத்தின் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது நியாயமா ?

இந்த கேள்விகளில் ஏதேனும் ஒரு கேள்வியை கேட்டிருந்தால் கூட அதற்கு ராகுலால் பதில் அளித்திருக்க முடியாது. இது போன்ற கேள்விகளை முன்வைத்தார்.இவரது கருத்தை பார்க்கும்போது ஊடகங்களின் முதலாளிகள் அனைவரும் திமுகவிடம் கூட்டணி வைத்துள்ளதால் இப்படி அமைதியாக இருக்கின்றனவா என்ற கேள்வியும் பொது மக்களின் மனதில் எழுகின்றது.