ராகுல் காந்தியின்  பண்பாடற்ற   பேச்சு

ராகுல் காந்தியின் பண்பாடற்ற பேச்சு

      ரஃபேல் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி பெண் அமைச்சரின் பாதுகாப்பை நாடியிருப்பதாக, ராஜஸ்தான்  மாநிலம் ஜெய்பூரில் நடந்த விவசாயிகளின் கூட்டத்தில்  The watchman with a 56 inch chest ran away and told a woman, Sitharaman ji, defend me ( ek mahaila say kaha meri raksha kiijiye )  I won’t be able to defend myself defend me”  பேசியது  அநாகரீகமான பேச்சு.  ராகுல் காந்தி மோடி மீது வைக்கும் விமர்சனம் வெறுக்க தக்க வகையில் தொடர்கிறது.  பாராளுமன்றத்தில் ராணுவ அமைச்சர் தனது  துறை சம்பந்தமான கேள்விகளுக்கு பதில் அளித்த பின்னரும், பொது மேடைகளில் அநாகரீகமாக பேசுவது, காங்கிரஸ் கட்சியின் தலைவருக்கு அழகல்ல. பாராளுமன்றத்தில் ராகுல் காந்தி பேசியவுடன், அமைச்சர்கள் பதில் அளித்த பின்னரும், அது சம்பந்தமான கேள்விகளை கேட்க கூட ராகுல் காந்தி முன் வருவதில்லை.  இதற்கு மாறாக பொதுக் கூட்டங்களிலும், தனது டுவிட்டர் பக்கத்திலே பதிய விடுவது, ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு அழகல்ல.

 காங்கிரஸ் கட்சியின் வரலாறு பல்வேறு கால கட்டங்களில் நடந்த சம்பவங்களை சற்றே ஆய்வு செய்தால், பாராளுமன்றத்தில் பிரதமருக்கு பதிலாக மூத்த அமைச்சர்கள் பதில் அளித்தார்கள்.    இது ராகுல் காந்தியின் குற்றமல்ல, சேர கூடாதவர்களுடன் சேர்ந்ததால் ஏற்பட்ட விளைவு, பழக்க தோஷம்.   இந்திய அரசியல் வரலாற்றில், எல்லாவற்றிக்குமே பிரதமர் பதில் அளிப்பதில்லை.   தமிழகத்தில் திரு. காமராஜர் முதல்வராக இருந்த போது, பல கேள்விகளுக்கு பதில் அளித்தவர்கள் திருவாளர் சி.சுப்பிரமணியம், ஆர். வெங்கட்ராமன் மற்றும் பக்தவச்சலம் என்பதை மறந்து விட்டு ராகுல் காந்தி பேசுகிறார்.  10 வருடம் ஆட்சியிலிருந்த மன்மோகன் சிங் கூட தனது இலாக்கா சம்பந்தமான கேள்விகளுக்கு பதில் அளிக்காமல், ப.சிதம்பரம், பிரணாப் முகர்ஜி மூலமாகவே பதில்கள் கொடுக்கப்பட்டன என்ற வரலாறு தெரியாமல் பேசுகிறார்.

       அநாகரீகமாக பேசுவதும், நடப்பதும் காங்கிரஸ் கட்சிக்கு புதிதல்ல.  2004 ஆகஸ்டில் நாடாளுமன்றத்தில் நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் எல்.கே. அத்வானியும், ஜார்ஜ் ஃபெர்னாண்டஸூம் நிதி அறிக்கையில் சில மாற்றங்களைக் கொண்டு வரவேண்டும் என்று சொல்லி பிரதமரை சந்திக்க வந்தார்கள்.  பிரதமரின் உரையை தடுத்த காரணத்திற்காக இருவர் மீதும் எரிச்சலில் இருந்த மன்மோகன் சிங் வந்தவர்களை உட்காரக் கூடச் சொல்லவில்லை.  தேநீர் அருந்துங்கள் என்று சம்பிரதாயமாகக் கூடக் கேட்கவில்லை.  நின்றபடியே கடிதத்தை வாங்கிக் கொண்டார், உட்காராமல், கொடுத்த கடிதத்தை திரும்பி கூட பார்க்காமல் மேஜையின் மீது வீசி எறிந்தார்.  இப்படி பட்டவரை அருகில் உட்கார வைத்துக் கொண்டு ஆலோசனை கேட்கும் ராகுல் காந்தி வேறு எப்படி பேசுவார் என எதிர்பார்க்க முடியும்.

       போபர்ஸ் ஊழலில் குற்றவாளி குத்ரோஷியை தப்பிக்க வைத்த போது, பாராளுமன்றத்தில் பல கேள்விகள் எழுப்பட்டன.  எழுப்பிய கேள்விகளுக்கு முறையான பதிலை பிரதமர் மன்மோகன் சிங் அளிக்கவில்லை, மாறாக  அன்றைய நிதி அமைச்சர் ப.சிதம்பரமே பதில் அளித்தார் என்பதை ராகுல் காந்தி நினைத்து பார்த்தால் மோடியை பற்றிய விமர்சனம் எழுந்திருக்காது.   மே 2004-ல் பிரதமர் பதவி கிடைக்காத காரணத்தால், பிரதமருக்கு உள்ள அதிகாரம் கொண்ட தேசிய ஆலோசனை கவுன்லின் தலைவராக சோனியா காந்தி நியமித்த பின்னர், பிரதமருக்கு செல்லும் அனைத்து ஆவணங்களும் சோனியாவிடமும் காண்பிக்கப்பட்டது, குறிப்பாக சி.பி.ஐ. அறிக்கையையும் பார்வையிடும் அதிகாரம் எவ்வாறு கிடைத்தது?, இது தவறானது என பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய போது, பிரதம மந்திரி பதிலிக்காமல்,  அன்று பிரணாப் முகர்ஜி பதில் அளித்தார் ஏன் பிரதமர் பிரணாப் பின்னால் ஒளிந்து கொண்டார் என யாரும் கேள்வி எழுப்பவில்லை.  

       நாகரீகமற்ற பேச்சும், அநாகரீகமான செயல்பாடும் ராகுல் காந்தியிடம் மண்டியுள்ளது.   காரணத்தை நன்கு ஆராய்ந்தால், காங்கிரஸ் தி.மு.க.வுடன் கூட்டணி வைத்ததின் காரணமாக ஒட்டுவார்  ஒட்டி நோய் தொற்றிக் கொண்டுள்ளது.  தி.முக.வினர் அநாகரீகமான வகையிலும், பண்பற்ற முறையிலும் விமர்சனம் செய்வதில் வல்லவர்கள்.  காந்தியைப் பற்றியும், நேருவை பற்றியும், காமராஜரைப் பற்றியும் தி.மு.க.வினர் வைத்த அநாகரீக விமர்சனங்களை திருப்பி பார்த்தால், ராகுல் காந்தியின் பேச்சும் அவ்வாறே அமைந்துள்ளது.   இளம் பெண்களின் தோளில் கைப் போட்டு கொண்டு காந்தி வருகிறார் என்றும், நேருவே மனைவியை இழந்தவர், பண்டரநாயகாவோ  கணவனை இழந்தவர் இருவரும் ஒரு மணி நேரம் தனிமையில் சந்தித்தார்கள் என்றால் என்ன செய்திருப்பார்கள் சிந்தித்து பார்  தம்பி என கடிதம் எழுதியவர் அண்ணாதுரை.  திராவிட நாடு எங்கே இருக்கிறது என காங்கிரஸ் சட்ட மன்ற உறுப்பினர் அனந்தநாயகி எழுப்பிய கேள்விக்கு, கொச்சையாக சட்ட மன்றத்தில் பதில் அளித்தவர் கருணாநிதி.  ஒரு நடிகையின் கற்பின் மீது கொச்சைப்படுத்தி சேலத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசியவர் அண்ணாதுரை. 

       ராகுல் காந்தியின் மீது தவறு கிடையாது. பழக்க தோஷத்தின் காரணமாகவே வெளியில் பேசுகிறார்.  நேரடியாக ராகுல் காந்திக்கு கேள்வி எழுப்பினால், ஏன் ஆனந்த் சர்மாவும், கபில் சிபிலும், ப.சிதம்பரமும் முந்திக் கொண்டு பதில் அளிக்கிறார்கள்.  ராகுல் காந்தி இவர்களின் பின்னால் ஒளிந்து கொள்கிறாரா என்ற கேள்வியை கேட்டால் பதில் இல்லை.   திரு.சுப்பிரமணிய சுவாமி எழுப்பும் கேள்விகளுக்கு இதுவரை இவர் வாய் திறந்து பதில் அளித்துள்ளாரா?   பாராளுமன்றத்தில் ஒரு டேப்பை காட்டி விவாதம் நடத்த முற்பட்ட போது, சபாநாயகர் கேட்டது,    தாக்கல் செய்கின்ற டேப்பின் நம்பக தன்மைக்கு பொறுப்பு ஏற்றுக் கொள்ள தயாரா என்றவுடன், வாய் திறக்காமல் சச்சின் பைலட் பதில் கூறுவது தான் இவரின் செயல்பாடாக தெரிகிறது.  பல்வேறு ஊழல்  மற்றும் முறைகேடுகள் நடந்ததைப் பற்றி கேள்வி கேட்ட சமயம் திருமதி சோனியா காந்தி பதில் சொல்வதற்கு மாறாக மற்றவர்கள் பதில் கூறுவது மட்டும் சரியானதா என்பதை ராகுல் காந்தி திரும்பி பார்க்க வேண்டும்.

       திருவாளர் ராகுல் காந்தியின் காங்கிரஸ் கட்சி, ராஜீவ் காந்தி அகல மரணமடைந்த பின்னர், கட்சியின் தலைமைக்கு மூத்த தலைவர்கள் பலர் இருந்தும், அந்நிய நாட்டு பெண்மணி சோனியாவின் பின்னல் ஒளிந்து கொண்டு, அவரை தலைவராக்கியது ஏன்?, அப்பொழுது தெரியாத ஏளனம் தற்போது தான் ராகுலின் கண்களுக்கு தெரிகிறதா?.  மீடூ வலைத் தளத்தின் மூலம் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களின் வண்டவாளம் தண்டவாளத்தில் ஏறிய கதை தெரியாதா?  காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பான NSUI  தலைவர் பெரோஸ் கான் தன்னுடன் படிக்கும் சக மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்டதும்,  புகார் செய்தால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரும் என மிரட்டிய சம்பவங்களும் உண்டு.  ஐ.டி. பிரிவின் தலைவியும் கன்னட நடிகையுமான ரம்யா, தன் சக ஐ.டி.பிரிவின் பொறுப்பாளர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என்ற குற்றச்சாட்டை வைத்த போது ராகுல் காந்தி என்ன செய்து கொண்டிருந்தார்?   காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் சிங்வி, நாராயண் தத் திவாரி,  ராஜஸ்தான் மாநிலத்தில் ஆட்சியிலிருந்து காங்கிரஸ் கட்சியின் கேபினட் அமைச்சர் பாபுலால் நாகர் போன்றவர்களின் செயல்பாடுகள் தான் ராகுல் காந்தியின் பேச்சுக்கு காரணமாக அமைந்துள்ளன.

       திருவாளர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் Be a man and answer my question . Did the Air Force and Defence Ministry object when you by passed the orginal Rafale deal?  Yes? Or No?           கேள்வியை எழுப்பியுள்ளார்.   இதே போல் பா.ஜ.க.வும் ராகுல் காந்தியிடம் சில கேள்விகள் கேட்கிறார்கள், தங்களது டுவிட்டரில் சொல்லியப்படி ஒற்றை வார்த்தையில் பதில் தர வேண்டும்.   ஐ.மு.கூ. ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தம் கால தாமதம் ஆனது ஏன் கமிஷன் பிரச்சினை என கூறுகிறார்களே ?  போப்பர்ஸ் ஊழல் வழக்கில் உங்கள் குடும்பத்திற்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதா இல்லையா?  10 ஆண்டுகள் ஆட்சியில் நடந்த முறைகேடுகள் தங்களுக்கு தெரியுமா அல்லது தெரியாதா?     இப்படி பல கேள்விகள் எழும் போது மட்டும் தாங்கள் தப்பித்துக் கொள்வது ஏன்?  இறுதியாக ஒரு கேள்வி மோடி ஆண்மகனா என்ற கேள்வி எழுப்பியுள்ளாரீர்கள்.  இதற்கு பதில் கூறுவது குழாய்யடி சண்டையாக மாறிவிடும்.  உங்களின் பெண் நண்பர் ஒரு போதை பொருள் கடத்தல் மன்னனின் மகள் என்று கூறுகிறார்களே அது உண்மையா என்பதை உலகிற்கு தெரியப்படுத்த முடியுமா?

பாதுகாப்பு அமைச்சராக இருந்து நாட்டையே பாதுகாத்து கொண்டிருப்பவர் நிர்மலா சீதாராமன் என்ற பெண்மணி. அப்படி பாத்தால் நீங்களும் அவரின் பாதுகாப்பில் தான் இருக்கிறீர்கள் என்பதை மறந்து விடவேண்டாம் ராகுல் காந்தி.

-    ஈரோடு சரவணன்,