ராகுல் காந்தியை தோற்கடிப்போம் - கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் பிரகாஷ் காரத்

ராகுல் காந்தியை தோற்கடிப்போம் - கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் பிரகாஷ் காரத்

உத்திர பிரதேசத்தில் அமேதி தொகுதியில் தோல்வி அடைவோம் என்கிற பயத்தில் ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிடுகிறார்.  இங்கு முஸ்லீம், கிறிஸ்தவர்கள் 55% என்பதால் இங்கு ராகுல் வெற்றிபெறுவது எளிது என காங்கிரஸ் கணக்குப்போட்டு ராகுலை இறங்கியுள்ளது.

கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சியை வீழ்த்துவோம், கேரளாவிலிருந்து கம்யூனிசத்தை விரட்டுவோம் என்கிற கோஷத்தோடு காங்கிரஸ் களமிறங்கியுள்ளது. ராகுலுக்கு பதிலடி தரும் வகையில் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் 'பிரகாஷ் காரத்' "ராகுல் காந்தியை கேரளாவில் மண்ணை கவ்வ வைப்போம்" என்று பேசியுள்ளார்.

காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் இடையில் கேரளாவில் ஏற்பட்டுள்ள மோதலின் தாக்கம் தமிழ்நாட்டிலும் எதிரொலிக்க துவங்கியுள்ளது. ராகுலை வீழ்த்துவோம் என்று கூறும் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் தொகுதியில் வேலை செய்யமாட்டோம் என காங்கிரஸ் தொண்டர்கள் கூறி வருகிறார்கள்.