ராபர்ட் வதேராவிடம் 3 மணி நேரம் விசாரணை - சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கு

ராபர்ட் வதேராவிடம் 3 மணி நேரம் விசாரணை - சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கு

மத்திய தில்லியின் ஜாம்நகர் பகுதியிலுள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் ராபர்ட் வதேரா புதன்கிழமை காலை 10.30 மணியளவில் ஆஜரானார். அவரது வழக்குரைஞர்களும் உடன் வந்தனர். அவரிடம் சுமார் 3 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறியதால், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெறவில்லை. அவர் வெள்ளிக்கிழமை மீண்டும் ஆஜராகும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

லண்டனின் பிரயன்ஸ்டோன் சதுக்கத்தில், பினாமி பரிவர்த்தனையின் மூலம் சொத்து ஒன்றை வாங்கியதாக வதேரா மீது அமலாக்கத் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதேபோல், சட்டவிரோத பணப் பரிவர்த்தனைகளின் மூலம் மேலும் பல சொத்துகளை அவர் வாங்கியிருக்கலாம் என்று நீதிமன்ற விசாரணையின்போது அமலாக்கத் துறையினர் தெரிவித்தனர். ஆனால், வெளிநாடுகளில் சட்டவிரோத சொத்துகள் எதுவும் தனக்கு இல்லை என்று ராபர்ட் வதேரா மறுப்பு தெரிவித்து வருகிறார். இந்த வழக்கில் அமலாக்கத் துறை விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்கும்படி, அவருக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியது.