ராமஜென்ம பூமி விவகாரம் நீதிமன்றத்தை நம்புவோம் - பிரதமர்

ராமஜென்ம பூமி விவகாரம் நீதிமன்றத்தை நம்புவோம் - பிரதமர்

அயோத்தி பிரச்னை: அயோத்தி ராமர் கோயில் பிரச்னையில் சிலர் தேவையில்லாமல் தொடர்ந்து பேசிவருவது எனக்கு வியப்பளிக்கிறது. அயோத்தி வழக்கை உச்சநீதிமன்றம் இப்போது விசாரித்து வருகிறது. எனவே, இந்த விஷயத்தில் உச்சநீதிமன்றத்தை மதித்து நடக்க வேண்டும். அயோத்தி விவகாரம் குறித்து தொடர்ந்து பேசி வருபவர்களுக்கு நான் ஒன்றை கூறிக்கொள்ள விரும்புகிறேன். நமது நீதித்துறை மீது நம்பிக்கை வைக்க வேண்டும்; தேவையில்லாமல் பேசுவதைத் தவிர்க்க வேண்டும் என்பதுதான் அது.

முன்னதாக, மகாராஷ்டிரத்தில் பாஜகவின் கூட்டணிக் கட்சியான சிவசேனையின் தலைவர் உத்தவ் தாக்கரே, அயோத்தியில் ராமர் கோயில் கட்ட மத்திய அரசு துணிவுடன் செயல்பட வேண்டும். இது தொடர்பாக அவசரச் சட்டம் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தினார். அவருக்கு பதிலளிக்கும் வகையிலேயே மோடி இவ்வாறு கூறியுள்ளார்.