ராமரின் பெயரை இந்தியாவில் சொல்லாமல் பாகிஸ்தானிலா கூறமுடியும்? - அமித் ஷா ஆவேசம்

ராமரின் பெயரை இந்தியாவில் சொல்லாமல் பாகிஸ்தானிலா கூறமுடியும்? - அமித் ஷா ஆவேசம்

மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, மோடியை பிரதமராக கருதவில்லை என கூறினார். அரசியலமைப்பின் படி, மோடி நாட்டில் உள்ள மக்களால் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.  அதேபோல் இப்போது நடைபெற்று கொண்டிருக்கும் தேர்தலும், நாட்டில் ஜனநாயகத்தை மீண்டும் நிலை நாட்டும் என்பதில் சந்தேகமில்லை. 

மத்தியில் ஆளும் பாஜக, நிச்சயம் மேற்கு வங்காளத்தில் 23 தொகுதிகளில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறும். கடந்த 5 ஆண்டுகளில் ரூ. 4 லட்சத்து 24 ஆயிரத்து 800 கோடி மேற்கு வங்காளத்தின் வளர்ச்சிக்காக மத்திய அரசு நிதி வழங்கியுள்ளது. 

 'ஜெய் ஸ்ரீராம்’ என்று உச்சரிப்பவர்களை மம்தா பானர்ஜி சிறையில் தள்ளுகிறார். ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று உச்சரித்தாலே சிறையில் அடைக்கும் நிலைமைதான் மேற்கு வங்காளத்தில் இருக்கிறது. ராமரின் பெயரை இந்தியாவில் சொல்லாமல் பாகிஸ்தானிலா கூற முடியும்? என்று பாஜக தேசிய தலைவர் அமித் ஷா இன்று மேற்கு வங்காளத்தின் கத்தால் பகுதியில் நடந்த பிரசாரப்பொதுக் கூட்டத்தில் கலந்துக் கொண்டு பேசினார்.