ராமர் பாலம் பற்றி ஆய்வு மேற்கொள்ள மத்திய அமைச்சர் அறிவுறுத்தல்

ராமர் பாலம் பற்றி ஆய்வு மேற்கொள்ள மத்திய அமைச்சர் அறிவுறுத்தல்

ராமர் பாலம் பற்றி ஆய்வு மேற்கொள்ள மத்திய அமைச்சர் அறிவுறுத்தல்.  மத்திய மனிதவள துறை அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால் இளம் ஆராய்ச்சியாளர்கள் இந்திய பண்பாட்டின் அடையாளமாக திகழும்' ராமர் பாலம்' போன்ற தொல்லியல் சின்னங்களை பற்றி ஆய்வுமேற்கொள்ளவேண்டும் என அறிவுறுத்தினார்.

காரக்பூர் I.I.T.  பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அவர் மேலும் கூறியதாவது நம் நாட்டில் ஏராளமான கலாச்சார சின்னங்கள் உள்ளன. அவற்றை ஆராய்ந்து நம் முன்னோர்களின் அறிவியல்,கணிதம், திறமை ஆகியவற்றை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லவேண்டியடித்து நம் கடமை ஆகும் என்று கூறினார்.