ராமலிங்கத்துக்கு நடந்த அநீதி. மௌனம் காக்கும் தலைவர்கள்

ராமலிங்கத்துக்கு நடந்த அநீதி. மௌனம் காக்கும் தலைவர்கள்

தமிழகத்தில் தஞ்சாவூர் அருகே உள்ள ஒரு ஊரில் இஸ்லாமியர்கள் மதம் மாற்றுவதற்காக வந்தபோது அவர்களை தடுத்து ஏன் மதம் மாற்றுகிறார்கள் என ஒருவர் கேள்வி எழுப்பினார். அவருக்கு நடந்த கொடூரத்தை நாம் அனைவரும் பார்த்ததே.

ஆனால் இறந்தவர் ஒரு இந்து என்பதினால் அவரை கொன்றது குறிப்பிட்ட ஒரு மதத்தை சார்ந்தவர்கள் என்பதினாலும் ராகுல்காந்தி அரவிந்த் கெஜ்ரிவால் மு க ஸ்டாலின் வைகோ திருமாவளவன் மற்றும் பல அரசியல் கட்சித் தலைவர்கள் மௌனம் சாதித்து வருகிறார்கள்.

அநீதி நடந்தாலும், ஒருவர் உயிர் பிரிந்தாலும் அதில்கூட இறந்து போனவர் எந்த மதம் கொன்றவர் எந்த மதம் என பார்த்து ஆராய்ந்த பிறகுதான் கண்ணீர் விடுவதாக இல்லை கண்மூடி விடுவதா என்ற ஒரு கேவலமான அரசியல் நாகரீகத்தை இவர்கள் உருவாக்கி உள்ளார்கள்.

பாரதிய ஜனதா கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி, இந்து முன்னணி விஷ்வ இந்து பரிஷத் போன்ற சில அமைப்புகள் தவிர வேறு யாரும் ராமலிங்கத்துக்கு நடந்த இந்த கொடூரத்திற்கு

எதிராக வாய் திறக்கவே இல்லை.

ஆனால் பொதுமக்கள் இடையே இது ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.  நாடு முழுவதும் இருக்கும் இந்திய மக்கள் ஜாதி மத வேறுபாடின்றி ஒருங்கிணைந்து குரல் கொடுத்து வருகிறார்கள். சமூக வலைதளங்களில் #JusticeForRamalingham என்கிற ஹாஷ்டாகில் அவர்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகிறார்கள்.

அரசியல்வாதிகளின் இந்த மதம் சார்ந்த போக்கு நாட்டிற்கு நல்லதல்ல. இவர்கள் எல்லாம் சேர்ந்து பாரதிய ஜனதாக் கட்சி இந்து முன்னணி போன்ற அமைப்புகளை மத வெறியர்கள் என சித்தரிக்க முயற்சிக்கும் போது தான் வேடிக்கையாக இருக்கிறது.

- ஆனந்த் பிரசாத்