ராமாயணத் திருத்தலங்கள் பார்க்கலாம்! ‘பாரத தரிசனம்’ சிறப்பு ரயில் சுற்றுலா

ராமாயணத் திருத்தலங்கள் பார்க்கலாம்! ‘பாரத தரிசனம்’ சிறப்பு ரயில் சுற்றுலா

இந்திய ரயில்வேயும் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமும் (ஐஆர்சிடிசி) இணைந்து, ‘பாரத தரிசன சுற்றுலா’ ரயில்பயணத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

இதன் ஒரு கட்டமாக, ராமாயண யாத்திரை உள்ளிட்ட 4 சிறப்பு ரயில் சுற்றுலாக்களை ஐஆர்சிடிசி அறிவித்துள்ளது. இவற்றின் விவரம்:

1. ராமாயண யாத்திரை : இது, 15 நாட்கள் சிறப்பு சுற்றுலா. இந்த ரயில், மதுரையில் இருந்து வரும் 14ம் தேதி (நவ.14) புறப்படுகிறது. ராமாயண நிகழ்வுகளுடன் தொடர்புள்ள ஹம்பி, நாசிக், சித்திரக்கூடம், தர்பங்கா, சீதாமார்ஹி, அயோத்தியா, நந்திகிராமம், அலகாபாத், சிறுங்கவெற்பூர், நேபாளத்தில் உள்ள ஜனக்புரி, ராமேஸ்வரம், திருப்புல்லாணி, தேவிப்பட்டினம் ஆகிய பகுதிகளுக்கு சென்றுவிட்டு, மதுரைக்கு திரும்புகிறது. ஒரு நபருக்கு கட்டணம் : ரூ.15 ஆயிரத்து 830. 

2. கோவா ஸ்பெஷல் : இது, 5 நாட்கள் சிறப்பு சுற்றுலா. இந்த ரயில், மதுரையில் இருந்து டிசம்பர் 14ம் தேதி புறப்படுகிறது. திண்டுக்கல், கரூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட், சேலம், ஈரோடு, கோவை போத்தனுார் வழியாக கோவா சென்றடைகிறது. ஒரு நபருக்கு கட்டணம் : ரூ.4 ஆயிரத்து 725.  

3. மூகாம்பிகை மற்றும் கர்நாடக ஆலயங்கள் ஸ்பெஷல் : இது, 5 நாட்கள் சிறப்பு சுற்றுலா. இந்த ரயில், மதுரையில் இருந்து டிசம்பர் 14ம் தேதி புறப்படுகிறது. திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், சென்னை எழும்பூர், காட்பாடி, ஜோலார்பேட், சேலம், ஈரோடு, கோவை போத்தனுார் வழியாக உடுப்பி கிருஷ்ணர், முருடேஸ்வர், கொல்லுார் மூகாம்பிகை, சிருங்கேரி சாரதா பீடம், ஹோரநாடு, அன்னபூரணி, தர்மசாலா மஞ்சுநாதர், குக்கே சுப்ரமண்யா உள்ளிட்ட புனிதத்தலங்களுக்கு செல்கிறது. ஒரு நபருக்கு கட்டணம் : ரூ.6 ஆயிரத்து 930.

4. ஐதராபாத், அஜந்தா, எல்லோரா, மும்பை மற்றும் கோவா ஸ்பெஷல் : இது, 10 நாட்கள் சிறப்பு சுற்றுலா. இந்த ரயில், மதுரையில் இருந்து டிசம்பர் 2ம் தேதி புறப்படுகிறது. திண்டுக்கல், கரூர், ஈரோடு, சேலம், ஜேலார்பேட், பெங்களூர், சென்னை சென்ட்ரல் வழியாக ஐதராபாத், அவுரங்காபாத், அஜந்தா, எல்லோரா, மும்பை, கோவா ஆகிய இடங்களுக்குச் செல்கிறது. ஒரு நபருக்கு கட்டணம் :ரூ.10 ஆயிரத்து 100. 
முக்கியக் குறிப்புகள் : 

* கட்டணத்தில் ஸ்லீப்பர் ரயில் கட்டணம், தென்னிந்திய சைவ உணவு, தங்கும் வசதி, சுற்றிப்பார்க்கும் வாகன வசதி கட்டணமும் அடக்கம்

* மத்திய, மாநில அரசு ஊழியர்கள் எல்டிசி/எல்எப்சி வசதிகளைப் பெறலாம்.

* முன்பதிவு மற்றும் கூடுதல் விவரங்களுக்கு ஐஆர்சிடிசியின் 90031 40680 மற்றும் 90031 40681 என்ற தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம்; ஐஆர்சிடியின் சென்னை, மதுரை, கோவையில் உள்ள சுற்றுலா மற்றும் தகவல் மையங்களிலும் முன்பதிவு செய்து கொள்ளலாம். 

* இவை உட்பட ஐஆர்சிடிசியின் பாரத தரிசனம் சுற்றுலா திட்டங்களின் விவரங்களை www.irctctourism.com என்ற இணையதளத்தில் அறியலாம்.