ரிசர்வ்பேங்க் விஷயத்தில் மக்களை குழப்பும் 2ஜி நாயகர்கள்

ரிசர்வ்பேங்க் விஷயத்தில் மக்களை குழப்பும் 2ஜி நாயகர்கள்

ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி சர்பிலஸ் அமௌண்ட் (Surplus amount) அதாவது உபரி நிதியை ரிசர்வ் வங்கி மத்திய அரசுக்கு திரும்ப செலுத்தி இருக்கிறது இது ஒவ்வொரு ஆண்டும் நடக்கக்கூடிய சாதாரண நிகழ்வு.


மற்ற வங்கிகளைப் போல ரிசர்வ் வங்கி தன்னுடைய வருமானத்திற்கு வருமான வரி கட்டுவதில்லை அதற்கு மாறாக மொத்த லாபத்தை உபரி நிதியாக ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசுக்கு திரும்ப அளிப்பது பல ஆண்டுகளாக நடைபெற்றுவரும் ஒரு சாதாரண நடைமுறை. இந்த ஆண்டும் அதே போல 90,000 கோடி உபரி நிதியை சேர்த்துதான் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் இந்த நிதியாண்டு பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.


இந்த உபரி நிதி எவ்வாறு வருகிறது என்றால் ரிசர்வ் வங்கியின் ஒட்டுமொத்த இருப்புநிலையில்(balance sheet) , ரிசர்வ் தொகை 26% மட்டுமே இது சுமார் 8 லிருந்து 9 லட்சம் கோடி வரையிலான தொகை. இந்த 26% ரிசர்வ் தொகை வெளிநாட்டு கரன்சி, தங்கம் முதலியவற்றில் சந்தை மதிப்பிற்கு ஏற்ப வாங்குவதாகவும் விற்பதாகவும் செய்யப்படும் இதன் மூலம் கிடைக்கும் வருமானமே சர்பிலஸ் அமௌண்ட் அதாவது உபரி நிதியாக காட்டப்படும். சென்ற வருடம் டாலர் மதிப்பு உயர்ந்த காரணத்தினால் கையிருப்பில் இருந்த டாலரை விற்று அதிக லாபம் கிடைத்ததால் அதற்கு முந்தைய ஆண்டுகளை விட சென்ற நிதி ஆண்டில் சர்பிலஸ் அமண்ட் 90000 கோடியாக இருந்தது.


அது போக இந்த வருடம் ஜலான் கமிட்டி பரிந்துரைப்படி CF என சொல்லப்படும் கண்டின்ஜென்ஸி ஃபண்ட் Contingency Fund இருப்பை 5.5 சதவீத இருந்து 6.5 சதவீதம் வரை கையிருப்பை வைத்துக்கொள்ள பரிந்துரை செய்தது ஜலான் கமிட்டி.


அதன் அடிப்படையில் ரிசர்வ் வங்கி இந்த நிதியாண்டு இந்த வருடம் 5.5% கையிருப்பு வைத்துக்கொள்ள முடிவு செய்தது. ஆனால் தற்போதைய கையிருப்பு 6.8 சதவீதம் இருந்த காரணத்தால் மீதமுள்ள 1.3 சதவீதத்தை சேர்த்து உபரி நிதியாக ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடியை மத்திய அரசுக்கு கொடுத்துள்ளது.


இந்த உபரி நிதி மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்களுக்கு பயன்படுத்தப்படுவது ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் சாதாரண விதி.


 இதை எதிர்க்கட்சிகள் தேவையில்லாமல் பெரிதுபடுத்தி மக்களை குழப்ப பார்க்கின்றனர். 2ஜி ஊழல் செய்து ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி அரசிற்கு நஷ்டத்தை ஏற்படுத்தி டெல்லி முதல் கண்ணியாகுமரி வரை பங்கு போட்ட திருடர்களிடம் ,பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசை விமர்சிப்பது சற்று நகைப்பை ஏற்படுத்துகிறது. எவ்வாறு 5 ஆண்டுகளில் 10 கோடி கழிப்பிடங்கள் கட்டி ஏழைப் பெண்களின் வாழ்வில் ஒளியேற்ற வைத்தார்களோ அதேபோல அனைவருக்கும் வீடு போன்ற பல மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றுவதற்காக இதுபோன்ற உபரி நிதி பயன்படுத்தப்படும்.


காங்கிரஸ் திமுக போன்ற ஊழல்வாதிகளிடம் மக்கள் பணி மக்கள் நலத் திட்டங்களை பற்றி பேசி எந்த பயனும் இல்லை. 


 காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து பற்றி எந்த வித புரிதலும் இல்லாமல் பேசிவிட்டு பின்னர் பின் பின்வாங்கிய திமுக, இந்த விஷயத்திலும் எந்தவித அடிப்படை அறிவும் இல்லாமல் பேசி வருகின்றனர்.  


- CTR.Nirmal Kumar

State President - IT and Social media