ரிசர்வ் வங்கி கவர்னர் ராஜினாமா

ரிசர்வ் வங்கி கவர்னர் ராஜினாமா

இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் உர்ஜித் படேல் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். வரும் 14ம் தேதி ரிசர்வ் வங்கியின் கூட்டம் நடைபெற இருந்த நிலையில் உர்ஜித் ராஜினாமா செய்துள்ளார். இவர், தனது சொந்த காரணங்களுக்காக ராஜினாமா செய்வதாகவும், இதுவரை தனக்கு முழு ஒத்துழைப்பு அளித்த ரிசர்வ் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள், போர்டு இயக்குனர்கள் அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துக்கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

உர்ஜித்க்கு செப்டம்பர் 2019 வரை பதவி காலம் உள்ளது குறிப்பிடத்தக்கது.