"ரூ பே"வின் வளர்ச்சி வெளிநாட்டு அட்டைகள் அதிர்ச்சி

"ரூ பே"வின் வளர்ச்சி வெளிநாட்டு அட்டைகள் அதிர்ச்சி

நம் நாட்டில் புழக்கத்தில் இருக்கும் மாஸ்டர் மற்றும் விசா கார்டுகள் அமெரிக்க நாட்டு கடன் அட்டைகள். நம் நாட்டு வங்கிகளும் இந்த அட்டைகளைத்தான் பெருமளவில் தங்கள் இந்திய வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றன. இந்தியாவில் இந்த அட்டைகளை உபயோகித்து பரிவர்த்தனை நடத்துவோரின் எண்ணிக்கை 1 பில்லியனுக்கும் மேல். 

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி "ரூ பே" எனப்படும் உள்நாட்டு அட்டைகளை பயன்படுத்துவதால் அதிலிருந்து பெறப்படும் சேவை கட்டணம் வெளிநாட்டிற்கு செல்லாமல் நம் நாட்டிலேயே இருக்கும். அந்த பணம் நம் நாட்டின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். எனவே, "ரூ பே" அட்டைகளை அனைவரும் ஊக்கப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

எனவே, இனி மாஸ்டர் கார்டு, விசா கார்டு ஆகிய வெளிநாட்டு கம்பெனிகளுக்கு இங்கே கடினமான காலமாகவே இருக்கும் என்று கவலை வந்து விட்டது. இது குறித்து அந்த கம்பெனிகள் தங்கள் தலைமையிடங்களுக்கு கடிதம் எழுதியுள்ளன. "மோடி கார்டு மூலம் பண பரிவர்த்தனையை தேசியத்துடன் இணைத்து விட்டார். இந்தியா பல பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால், இனி நமக்கு இங்கு கடினமான காலமாகத்தான் இருக்கும்." என்று அவை குறிப்பிட்டுள்ளன.