ரெஹானா பாத்திமா கைது

ரெஹானா பாத்திமா கைது

சபரிமலை கோவிலுக்குள் செல்ல முயன்று  சர்ச்சையை ஏற்படுத்தியவர்  ரெஹனா பாத்திமா. இவர் தனது முகநூல் பக்கத்தில் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் கருத்துக்கள் பதிவு செய்ததற்காக இன்று கைது செய்யப்பட்டார். இந்த காரணத்திற்காக தான் கைது செய்யப்படக்கூடும் என்று கருதிய அவர்  நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். 

ஆனால், அவரது முன் ஜாமீன் மனு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் பட்டணம் திட்டா போலீஸார் அவரை கைது செய்தனர். சபரிமலைக்கு எல்லா வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து கடந்த அக்டோபர் மாதம் சபரிமலை கோவிலுக்குள் நுழைய முயன்றார் ரெஹெனா பாத்திமா. இவர் இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தியதற்காக அவர் சார்ந்த இஸ்லாமிய மதத்திலிருந்தும் விலக்கி வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.