லேட்டா வந்ததால் முத்தலாக்

லேட்டா வந்ததால் முத்தலாக்

உத்திர பிரதேச மாநிலம் எடாவை சேர்ந்த இஸ்லாமிய பெண் ஒருவர் உடல் நலம் சரியில்லாத தன் பாட்டியை பார்ப்பதற்காக தன் பிறந்த வீட்டிற்கு சென்றுள்ளார். அப்படி செல்லும் போது அவர் தன் கணவரிடம் அனுமதி கேட்டுள்ளார். அவள் கணவனும் நீ 30 நிமிடங்களுக்குள் திரும்பி விடவேண்டும் என்ற நிபந்தனையுடன் அனுமதியளித்துள்ளான். ஆனால், பிறந்த வீட்டில் அந்த பெண்ணிற்கு சிறிது நேர தாமதமாகி விட்டது. இதனால் சொன்ன நேரத்தை விட 10 நிமிடங்கள் தாமதமாக வீட்டிற்கு வந்துள்ளார் அந்த பெண். 

குறித்த நேரத்திற்கு வீட்டிற்கு வராததால் அவள் கணவன் அவளது சகோதரனை போனில் தொடர்பு கொண்டு முத்தலாக் கூறி அவளை விவாகரத்து செய்துள்ளான். அந்த பெண் எடா போலீஸில் புகார் அளித்ததை தொடர்ந்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசு இஸ்லாமிய பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்பு சட்டத்தின் மூலம் முத்தலாக் முறையை ஒழிக்க முயற்சி மேற்கொண்டது. மக்களவையில் நிறைவேற்றப்பட்ட இந்த சட்டம் மாநிலங்களவையில்  நிறைவேற முடியவில்லை. இதனால், அவசர சட்டம் பிறப்பித்துள்ளது மத்திய அரசு.