லேட்டா வந்தாலும் கரெக்டா வரணும் !  வந்துட்டா கண்டிப்பா அடிக்கணும்!

லேட்டா வந்தாலும் கரெக்டா வரணும் ! வந்துட்டா கண்டிப்பா அடிக்கணும்!

ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் நடித்து ஷங்கர் இயக்கியுள்ள திரைப்படம் 2.0. இந்த திரைப்படம் ரஜினிகாந்த் நடித்த "எந்திரன்" படத்தின் இரண்டாம் பாகமாக தயாராகியிருக்கிறது.இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார், லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது.  இந்த படத்தின் டிரெயிலர் இன்று வெளியிடப்பட்டது. 

டிரெயிலர் வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் பேசியதாவது,"2.0 படம் சூப்பர் ஹிட் ஆகும். இயக்குனர் ஷங்கர் நம்பிக்கையான மனிதர், அவர்  இதை உலகளவில் கொண்டு சென்றுள்ளார். இந்த படம் வருமா? வராதா? என்றெல்லாம் பலரும் சந்தேகப்பட்டார்கள். லேட்டானாலும் படம் கட்டாயம் வெற்றி பெறும். லேட்டா வந்தாலும் கரெக்டா வரணும்! வந்துட்டா கண்டிப்பா அடிக்கணும்! வந்தாச்சு! மக்கள் இதை சூப்பர் ஹிட் ஆக்க போகிறார்கள்.  என் நண்பர் கமல் நடித்து வரும் இந்தியன் - 2 படமும் வெற்றி பெறும்."

இவ்வாறு அவர் பேசியதை கேட்ட ரஜினி ரசிகர்கள் அவரது அரசியல் பிரவேசம் குறித்தான வசனமாக அதை எடுத்துக்கொண்டு மகிழ்ச்சி ஆரவாரம் செய்தார்கள்.