வக்பு வாரிய கல்லூரி பேராசிரியர்கள் நியமனத்தில் முறைகேடு

வக்பு வாரிய கல்லூரி பேராசிரியர்கள் நியமனத்தில் முறைகேடு

மதுரை வக்பு போர்டு கல்லூரியில் உதவிபேராசிரியர்கள் நியமனத்தில் முறைகேடு நடந்துள்ளதாக தொடரப்பட்ட வழக்கை சிபிஐ விசாரிக்க  வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 

வக்பு வாரியத்தின் கட்டுப்பாட்டில்  கல்லூரியில் உதவிபேராசிரயர்கள் மற்றும் ஊழியர்கள் நியமனத்தில் முறைகேடு நடந்துள்ளதாக  சென்னை  உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடரப்படடது.

அதில், உதவிபேராசிரியர் பணிக்காக இஸ்லாமிய விண்ணப்பதாரர்களிடம் இருந்து 30 லட்சம் ரூபாயும், மற்ற மதத்தவர்களிடம் 35 லட்சம் ரூபாயும் லஞ்சம் பெறப்பட்டாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஊழலில்  வக்பு வாரிய உறுப்பினர்கள் அமைச்சர் நிலோபர் கபில், வக்பு வாரிய தலைவர் அன்வர் ராஜா ஆகியோருக்கு பங்கு இருப்பதாக புகார் மனுவில் கூறப்பட்டிருந்தது.  

இந்த மனுவை நேற்று விசாரித்த  நீதிமன்றம், இந்த வழக்கில் தவறு நடந்திருப்பதாக கருத முகாந்திரம் இருப்பதாகவும், எனவே  இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று  உத்தரவிட்டது. மேலும், வழக்கை 6 மாதத்தில் முடித்து வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.