வங்கக்கடலில் புயல் சின்னம்

வங்கக்கடலில் புயல் சின்னம்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கி விட்டது. வடக்கு அந்தமான் கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. அடுத்த  48 மணிநேரத்தில் இது மேலும் வலுவடைந்து புயலாக மாறக்கூடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. பின்னர் இது வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கரையை நோக்கி நகரக்கூடும். இதனால், வட தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடலோர மாவட்டங்களில் வரும்  14ம் தேதி மாலை முதல் மழை அல்லது கன மழை பெய்யக்கூடும். 

எனவே, மீனவர்கள் அந்தமான் கடல் பகுதியில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும், ஆழ்கடலில் மீன் பிடிக்க சென்றவர்கள் கரை திரும்புமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.