வங்கி கணக்குகளே வெற்றியின் ரகசியம்

வங்கி கணக்குகளே வெற்றியின் ரகசியம்

பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் தமிழ்நாட்டில் உள்ள ஈரோடு, கிருஷ்ணகிரி, அரக்கோணம், கடலூர், தர்மபுரி ஆகிய மாவட்ட பாஜக தொண்டர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ஒரு தொண்டரின் கேள்விக்கு பதிலளித்த அவர், "எல்லோருக்கும் வங்கி கணக்குகள் துவக்கப்பட்டதன் மூலம் நாம் இடைத்தரகர்கள் இல்லாமல் அரசின் எல்லா நலத்திட்டங்களும் மக்களை நேரடியாக சென்று சேர வகை செய்துள்ளோம். இதுவரை சுமார் 33 கோடி வங்கி கணக்குகள் துவங்கப்பட்டுள்ளன. அவை ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளன. இதனால், பென்ஷன், கல்வி ஊக்கத்தொகை முதலான எந்த அரசின் நலத்திட்டத்தையும் மக்கள் யாரையும் எதிர்ப்பார்க்காமல் எளிதில் பெற முடிகிறது. இதன் மூலம் சுமார் 90,000 கோடி ரூபாய்கள் இடைத்தரகர்களுக்கு செல்லாமல நாம் காப்பாற்றியுள்ளோம்." என்று கூறினார்.