வங்க தேச தேர்தல்

வங்க தேச தேர்தல்

வங்கதேசத்தில் நாடாளுமன்ற தேர்தல்கள் முடிந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. ஷேக் ஹசினா தலைமையிலான ஆவாமி லீக் கட்சி தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை தக்க வைத்து கொண்டுள்ளது. மொத்தமுள்ள 300 நாடாளுமன்ற தொகுதிகளில் அந்த கட்சி 267 இடங்களை கைப்பற்றியுள்ளது. . முன்னதாக, தேர்தலின் போது  வங்கதேச அரசு கேட்டுக்கோண்டதற்கு இணங்க இந்தியா தேர்தல் பார்வையாளர்களை அனுப்பி வைத்தது. 

தேர்தலில் வெற்றி பெற்ற அவாமி லீக் கட்சியின் தலைவியும் வங்க தேச பிரதமருமான ஷேக் ஹசினாவிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.