வயது வரம்பில் மாற்றமில்லை

வயது வரம்பில் மாற்றமில்லை

*இந்திய குடிமை பணி தேர்வுகளை எழுதுவதற்கான வயது வரம்பை குறைக்கும் எண்ணம் எதவும் அரசுக்கு இல்லை என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெளிவுபடுத்தியிருக்கிறார். முன்னதாக குடிமை பணிகளுக்கான தேர்வுகளை எழுதுவதற்கு பொது பிரிவினர்க்கு வயது உச்ச வரம்பு 32ல் இருந்து 27 ஆக குறைக்கப்பட உள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. தற்போது குடிமை பணிகளுக்கான தேர்வுகளுக்கான வயது உச்ச வரம்பு பொது பிரிவினருக்கு 32 ஆகவும் எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு 37 ஆகவும் உள்ளது.