வரி குறைப்புக்கு பின் உச்சத்தை தொட்ட பங்கு சந்தை

வரி குறைப்புக்கு பின் உச்சத்தை தொட்ட பங்கு சந்தை

இன்றைய நாளில் தேசிய பங்குச்சந்தை நிப்டி மற்றும் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இரண்டும் ஏற்றத்துடன் தொடங்கியுள்ளன.  இன்று காலை மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்  உள்நாட்டு நிறுவனங்களுக்கு கார்ப்பரேட் வரியை குறைக்கும் அறிவிப்பை வெளியிட்டார். 

இதன் மூலம் பொருளாதாரம் வலுப்பெறும் என கூறப்பட்டது. அதன் எதிரொலியாக இன்று தொடங்கிய தேசிய பங்குச்சந்தை 1900 புள்ளிகள் ஏற்றத்துடன் தொடங்கியது. இதனால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.